மாமியாரை வெட்டி கொன்ற மருமகள்! காய்கறி குப்பையோடு கிடந்த உடல்!

சற்றுமுன்
murder-2-1

கொல்கத்தா மாநிலத்தில் ஹரிதேவப்பூர் பகுதியில், வசித்து வரும் சுஜாமணி (வயது 60) என்ற பெண், அங்கு இருக்கும் கோவில் ஒன்றில் பூ வியாபாரம் செய்து வருகின்றார். அவருடைய மருமகள் சுஜாதாவுக்கும், சுஜா மணிக்கும் தகராறு இருந்துள்ளது.

இதனால் அவரின் மருமகளின் வாழ்க்கை தினமும் சண்டை, சச்சரவாக இருந்துள்ளது. எனவே, மருமகளின் குடும்பத்தார் இணைந்து மாமியாரை கொலை செய்ய முடிவு செய்து இருக்கின்றனர். அவர்கள் திட்டமிட்டபடி சுஜாமணியை மருமகளின் குடும்பத்தினர் விருந்துக்கு அழைத்தனர். அவரும் அங்கு சென்ற பொழுது உணவில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து இருக்கின்றனர். இதை மாமியார் சாப்பிட்டவுடன் மயங்கி விழுந்துள்ளார்.

Screenshot_2020_0817_155547

பின்னர், அவரை சுஜாதாவின் குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து அடித்து, கொலை செய்துள்ளனர். பின்னர், அவருடைய தலை மற்றும் உடலை வெட்டி எடுத்து தலையை தக்காளி கூடையிலும், உடலை உருளைக்கிழங்கு கூடையிலும் போட்டு பார்சல் செய்து அந்த பகுதியில் சென்ற காய்கறிகள் வேனில் தூக்கி போட்டு இருக்கின்றனர். அந்த வேன் கொல்கத்தா நகரின் பல சோதனை சாவடியில் சோதனை செய்யப்பட்டது. ஆனால், பிணம் இருப்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், ஒரு போக்குவரத்து போலீசார் சோதனை செய்தபோது, அழுகிய நாற்றம் வருவதை கண்டு கூடையை பிரித்து பார்த்தபோது, அங்கே அவரின் பிணம் இருப்பதை கண்டுபிடித்து வழக்கு பதிவு செய்து விசாரித்த பொழுது, மருமகள் மாட்டியிருக்கின்றார். இந்த விவகாரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.