மெகா அறிவிப்பு வெளியிடும் சன் பிக்சர்ஸ் – விஜய் புது பட அறிவிப்பா?..

சினி நியூஸ் லைஃப் ஸ்டைல்

sun pictures

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ஒருவழியாக பொங்கலன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு பின் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருந்த நிலையில், முருகதாஸ் இப்படத்திலிருந்து வெளியேறிவிட்டார். எனவே, அப்படத்தை தற்போது நெல்சன் இயக்குவதாக கூறப்படுகிறது. ஆனாலும்,இதுவரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை.

இந்நிலையில், இன்று மாலை 5 மணிக்கு ஒரு மெகா அறிவிப்பை விரைவில் வெளியாகவுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட் செய்துள்ளது. எனவே, இது விஜயின் புதிய படமாக அறிவிப்பாக இருக்கலாம் என விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

அதே நேரம் சூர்யா – பாண்டிராஜ் இணையும் புதிய படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம்தான் தயாரிக்கவுள்ளது. எனவே, அப்படத்தின் அறிவிப்பாக இருக்கலாம் எனவும் சிலர் தெரிவித்து வருகின்றனர்.

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.