- 75 வயது மூத்த தெலுங்கு திரைப்பட இயக்குனர் மறைவு.
- சிரஞ்சீவியின் முதல் திரைப்பட இயக்குனர் காலமானார்.
- புகழ்பெற்ற டாலிவுட் இயக்குனர் கூடபாடி ராஜ்குமார் மறைவு.
கடந்த சில காலமாக உடல்நிலை பாதிப்பிலிருந்த அவர் சனிக்கிழமை காலை ஹைதராபாதில் மரணித்தார். மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்த முதல் திரைப்படம் ‘புனாதிராள்ளு’ வுக்கு ராஜ்குமார் இயக்குனராக பணிபுரிந்தார்.
இயக்குனராக அவருக்குக் கூட புனாதிராள்ளு முதல் சினிமாவே. முதல் சினிமாவுக்கே ஐந்து நந்தி அவார்டுகள் கிடைத்தன. 1977 ல் கதை எழுதிக் கொண்டு 1978-ல் இந்த திரைப்படத்தை இயக்கினார்.
அதன்பின் ‘ஈ சமாஜம் நாகு ஒத்து’, ‘மன ஊரி காந்தி’, ‘மா சிரிமல்லெ’ என்ற திரைப்பங்களோடு சேர்ந்து சுமார் எட்டு திரைப்படங்களுக்கு இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.
சில காலமாக கூடிபாடி ராஜ்குமார் உடல்நலனின்றி வருந்தினார். செய்தி அறிந்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி அண்மையில் அவருக்கு அப்போலோ மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகள் செய்வித்தார். பிரசாத்ஸ் கிரியேட்டிவ் மெண்டர்ஸ் பிலிம் மீடியா ஸ்கூல் மேனேஜிங் பார்ட்னர் சுரேஷ் ரெட்டி ரூ41 ஆயிரம், ‘மனம் சைதம்’ என்ற அமைப்பின் மூலம் நடிகர் காதம்பரி கிரண்குமார் ரூ25 ஆயிரம், இயக்குநர் பூரி ஜெகன்நாத் ரூ ஐம்பதாயிரம், இயக்குனர் மெஹர் ரமேஷ் ரூபத்தாயிரம், சீனியர் இயக்குனர் காசிவிஸ்வநாதன் ஐந்தாயிரம் ராஜ்குமாருக்கு பண உதவி செய்தார்கள்.
அண்மையில் கூடி பாடி ராஜ்குமாரின் பெரிய மகன் உடல்நலனின்றி இறந்தார். அந்த கவலையை தாங்கமுடியாமல் அதன்பின் அவருடைய மனைவியும் மரணித்தார். இவ்விரண்டும் ராஜ்குமாரை தனியாளாக்கின. தனிமையும் வருமானம் இல்லாமையும் சேர்ந்து அவர் வருத்தத்துக்கு ஆளாகி வாடகை வீட்டில் கவலையோடு வாழ்ந்து வந்தார். சனிக்கிழமையன்று காலை மரணமடைந்தார்.
கிருஷ்ணா மாவட்டம் உய்யூரைச் சேர்ந்த ராஜ்குமார் விஜயவாடாவில் டிகிரி முடித்து 1966ல் ஹைதராபாத் வந்தார். இங்கு பிசிக்கல் எஜுகேஷன் பயிற்சி பெற்று இரண்டு ஆண்டுகள் நாராயணகூட கேசவ மெமோரியல் பள்ளியில் பிசிகல் டைரக்டர் ஆக பணிபுரிந்தார். அந்த நேரத்திலேயே திரைப்படத்தின் மீது அவர் பார்வை திரும்பியது. நல்ல கதையோடு திரைப்படம் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினார். கல்லூரி நாட்களிலேயே நாடகங்கள் நடத்தியும் பாடல்கள் எழுதியும் அவருக்கு பழக்கம் இருந்தால் அந்த அனுபவத்தோடு திரைப்படங்களில் நுழைய ஆர்வம் கொண்டார்.
பாத்த பஸ்தி ‘ஜஹனுமாலோனா சதரன்’ மூவிஸ் ஸ்டூடியோவிற்குள் அடியெடுத்து வைத்தார். தன் ஆர்வத்தை நிர்வாகிகளிடம் தெரிவித்தார். சதி அனுசுயா, ரகசியம் போன்ற திரைப்படங்களுக்கு கோ டைரக்டர் ஆக பணிபுரிந்தார். அந்த ஸ்டுடியோவில் மராட்டி, ஹிந்தி திரைப்படங்களின் ஷூட்டிங்குகள் கூட நடந்தன. ராஜ்குமாரின் ஆர்வத்தை கவனித்த அந்த சினிமா இயக்குனர்கள் கோ டைரக்டராக அவருக்கு நிறைய வாய்ப்பளித்தார்கள்.
அதனால் தன்னம்பிக்கை கொண்ட ராஜ்குமார் புனாதிராள்ளு என்ற சினிமாவுக்கு கதை எழுதிக் கொண்டார். 1977இல் அந்த கதையை எழுதி 1978இல் சினிமா இயக்குவதற்கு முன்வந்தார். பல திரைப் பிரமுகர்கள் ராஜ்குமார் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.