தமிழகத்தில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகான இசுலாமியர்களின் திட்டமிட்ட கும்பல் போராட்டங்களை அடுத்து, குடியுரிமை திருத்தச் சட்டம், என்.பி.ஆர்., க்கு எதிரான போராட்டத்தை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் 6 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து டிஜிபி திரிபாதி பிறப்பித்த உத்தரவில்,
குடியுரிமை திருத்த சட்டம், என்.பி.ஆர்., என்.ஆர்.சி.,க்கு எதிராக நடக்கும் போராட்டங்களை கண்காணிக்கவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் 6 பேர் அதிகாரிகள் நியமிக்கப் பட்டுள்ளனர்.
மதுரை – அபய்குமார் சிங்
திருநெல்வேலி – மகேஷ்குமார் அகர்வால், முருகன்
தேனி – பாஸ்கரன்
தூத்துக்குடி – மகேந்திரன்
திண்டுக்கல் – ஜி.ஸ்டாலின் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்! இந்த அதிகாரிகள் ஒருங்கிணைத்து சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., செயல்படுவர்… என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, இன்று சிஏஏ, என்.பி.ஆர்., என்.ஆர்.சி.,க்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் குறித்து டிஜிபி திரிபாதி, சென்னை காவல் துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உள்ளிட்ட காவல் துறை உயரதிகாரிகள், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனைக் கூட்டம் சுமார் 50 நிமிடங்கள் நடைபெற்றது..