ஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பு துண்டிப்பு! மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் நெல்லை

sterlite - 2026

தூத்துக்குடி:  தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தால் துண்டிக்கப் பட்டுள்ளது. இதை அடுத்து ஆலைக்கான மின் விநியோகம் நின்றுபோனது.

ஸ்டெர்லைட் ஆலையில் மே 18, 19ஆம் தேதிகளில் நடத்தப்பட்ட ஆய்வில், ஆலையானது  உற்பத்தி செயல்பாடுகளை தொடங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதை அடுத்து, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்  ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்இணைப்பையும், வினியோகத்தையும் துண்டிக்குமாறு பரிந்துரை செய்தது.

நீர் மற்றும் காற்று மாசுபடுவதைத் தடுக்கும் சட்டப் பிரிவுகளின் கீழ், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, ஸ்டெர்லைட்டுக்கான மின் இணைப்பு மற்றும் வினியோகத்தை துண்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.  இதையடுத்து, ஸ்டெர்லைட்டுக்கான மின்இணைப்பு மற்றும் வினியோகம் வியாழக்கிழமை இன்று அதிகாலை 5.15க்கு துண்டிக்கப்பட்டது.

Posts by Senkottai Sriram:

Senkottai Sriram

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் | விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். | தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். | வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். | இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

https://dhinasari.com

1 thought on “ஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பு துண்டிப்பு! மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 8 =