இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் உடல் நலனை எப்படி பாதுகாப்பது குறித்தும், உடற்பயிற்சியின் அவசியத்தை குறித்தும் பேசி இருந்தார். மேலும் அவர் தனது ஃபிட்னெஸ் வீடியோவை வெளியிட்டிருந்தார். அவருக்கு இந்த ஃபிட்னெஸ் சேலஞ்ஜை விடுத்தது அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்.
முதலில் இந்தச் சவாலை ஆரம்பித்து வைத்தது மத்திய விளையாட்டுத் துறை ராஜ்யவர்தன் சிங் ரத்தோர். “நாம் ஃபிட்டாக இருந்தால், இந்தியா ஃபிட்டாக மாறும்” என்று ராஜ்யவர்தன் ரத்தோர் சமூக வலைதளத்தின் மூலம் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். அதன்படி ஃபிட்னெஸ் சேலன்ஜ் (FitnessChallenge) என்ற ஹேஷ்டேக் மூலம், இந்தியர்கள் தங்களது உடற்பயிற்சி முயற்சிகள் சமூக வலைதளங்களில் வீடியோவாகவும், புகைப்படமாகவும் பதிவிடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி, 2012ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் மெடலிஸ்ட் சாய்னா நேவால், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோஷன் ஆகியோருக்கு ஃபிடனஸ் சவால் விட்டுள்ளார். அவரின் சவாலை ஏற்று விராட் கோலி தனது உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு, அதில் பேசினார். மேலும், அவர் இந்த சவாலை பிரதமர் நரேந்திர மோடியையும், தோனியையும் குறிப்பிட்டு “டேக்” செய்தார். இதனையடுத்து ட்விட்டரில் விராட் கோலிக்கு பதிலளித்த மோடி “உங்களின் சவாலை ஏற்றுக்கொண்டேன், விரைவில் என் உடற்பயிற்சி வீடியோவை வெளியிடுவேன்” என தெரிவித்துள்ளார்.
Challenge accepted, Virat! I will be sharing my own #FitnessChallenge video soon. @imVkohli #HumFitTohIndiaFit https://t.co/qdc1JabCYb
— Narendra Modi (@narendramodi) May 24, 2018



