ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல்! வைகோ.,வுக்கு அரசு அதிகாரி கடிதம்!

சற்றுமுன் சென்னை தமிழகம்

vaiko - 2026

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று கோரி மதிமுக., பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். மேலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திலும் புகார் அளித்திருந்தார். ( Petition No.MOEAF/P/2018/00216 dt. 02.05.2018 )

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டச் சுற்றுச்சூழல் பொறியாளர் லிவிங்ஸ்டன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு எழுதியுள்ள கடிதத்தின் நகலை, வைகோ.,வுக்கு அனுப்பியுள்ளனர் (Letter No.DEE/TTN/F-Comp..2439/1-Petition/dated 15.06.2018)

அக்கடிதத்தில்,  ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா குழுமத்தினர், தங்களது உரிமத்தைப் புதுப்பிக்கக் கோரி அளித்து இருந்த விண்ணப்பத்தைத் தமிழ்நாடு மாசு
கட்டுப்பாட்டு வாரியம், 9.4.2018 அன்று ஏற்க மறுத்ததுடன், ஆலையை இயக்கக்
கூடாது என, 12.04.2018 அன்று ஆணை பிறப்பித்தது. அதைச் செயல் படுத்துவதற்கான நடைமுறைகளையும், மின் இணைப்பைத் துண்டித்தும்,
23.05.2018 அன்று அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, 24.05.2018 அன்று, மின்
இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஆலையை நிரந்தரமாக மூடுவதற்காக அரசு
ஆணை பிறப்பிக்கப்பட்டு, அதன்படி, 28.05.2018 அன்று ஆலைக்கு சீல்
வைக்கப்பட்டது.’

– என்று தெரிவித்துள்ளார்.  இந்தக் கடித விவரத்தை மதிமுக., வெளியிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.