
அழகிரி கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த அவருடைய ஆதரவாளர்களுக்கு ஆறுதல் அளிப்பது போல இந்த தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும் என்று அண்மையில் கூறியிருந்தார் மு க அழகிரி
இந்த நிலையில் இன்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அழகிரி தேர்தலில் ஓட்டு போடுவது கூட ஒரு பங்களிப்புதான் என்று கூறி, அவருடைய ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்!
மதுரை அருகே அழகர்கோவிலில் திருமண நிகழ்வில் கலந்து கொள்ள வந்திருந்தார் முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், சட்டமன்ற தேர்தலில் தங்களது பங்களிப்பு எவ்வாறு இருக்கும் என்று கேட்கப்பட்டது.
அந்தக் கேள்விக்கு பதில் அளித்த முக அழகிரி, பங்களிப்பு என்றால்… நான் சொன்ன பங்களிப்பு என்னவோ?! நீங்களாக ஒரு அர்த்தம் எடுத்துக் கொண்டால்?! சட்டமன்ற தேர்தலில் புதிய கட்சி தொடங்குவது ஒரு பங்களிப்பு, கூட்டணி அமைப்பது ஒரு பங்களிப்பு…, ஓட்டு போடுவது கூட ஒரு பங்களிப்புதான என்று என்று கூறினார்.
ரஜினியுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு, வாய்ப்பு கிடைத்தால் அவருடன் நடிக்க வேண்டுமானால் செய்வேன் என்று பதிலளித்தார்.
ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் குறித்த கேள்விக்கு, ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றார்.
ரஜினிகாந்த் புதிய கட்சி துவங்கி உள்ளது குறித்த கேள்விக்கு ரஜினிகாந்த் கட்சி தொடங்கியது குறித்து ஏற்கனவே ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளேன் என்று பதிலளித்தார்.