தனக்காக தீக்குளித்த 5 பேரின் படங்களுக்கு பூப்போட்ட வைகோ! வீண் ஆன உயிர்த் தியாகம்!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
vaiko
vaiko

ஸ்டாலினை திமுகவின் பட்டத்து இளவரசராக்க பார்க்கிறார் என கருணாநிதியை வைகோ விமர்சனம் செய்ததால், வை.கோ வை திமுக விலிருந்து கருணாநிதி நீக்கியதால், வைகோ விற்காக தீக்குளித்த 5 பேரின் நினைவு நாள் இன்று!

வைகோ திமுக.,வில் இருந்த நேரம், தனது மகன் ஸ்டாலினை திமுக.,வின் பட்டத்து இளவரசர் ஆக்கப் பார்க்கிறார் கருணாநிதி என்று விமர்சித்தார் வைகோ. இதற்காக, வைகோ., தன்னை கொலை செய்யப் பார்க்கிறார் என்றும், தன்னைக் கொன்றுவிட்டு திமுக,வை கைப்பற்றத் துடிக்கிறார் என்றும் குற்றம் சாட்டி, வைகோ.,வை திமுக.,வை விட்டு வெளியேற்றினார் கருணாநிதி.

இதற்காக வரிந்து கட்டிக் கொண்டு, வைகோவின் வெளியேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ ஆதரவாளர்கள் 5 பேர் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டார்கள். இன்று அவர்களின் நினைவு தினம்.

vaiko2
vaiko2

எந்தக் காரணத்துக்காக, வைகோவுக்கு ஆதரவாக தீக்குளித்தனரோ, அந்த தியாகத்தைக்க் கொச்சைப் படுத்தும் விதமாக, அதே காரணத்தை முன்னிறுத்தி, ஸ்டாலினுக்கு சாமரம் வீசிக் கொண்டு, இன்று மதிமுக.,வை திமுக.,விடம் அடகு வைத்துவிட்டார் வைகோ., என்றும், இனி மதிமுக., எனும் ஒரு தனிக்கட்சி எதற்கு, தனி சின்னம் எதற்கு, தனிக் கொடி எதற்கு?! திமுக.,வையே வைத்துக் கொள்ளலாமே என்று மதிமுக.,வினரே விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஏற்கெனவே கடந்த முறை திமுக.,வின் சின்னத்தில் போட்டியிட்டதால், இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் திமுக.,வின் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் என்று கூறியிருக்கிறார் வைகோ.

இன்று மதிமுக., தலைமை அலுவலகம் தாயகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் வைகோ.

அப்போது அவர், மறுமலர்ச்சி தி.மு.கழகம், தனி சின்னத்தில்தான் போட்டியிடும்… என்றார். மேலும், நான் பதவிகளுக்காக வாழ்வில்லை, லட்சியத்திற்காக வாழ்கிறேன் என்பது லட்சக்கணக்கான என் தொண்டர்களுக்கு தெரியும்…. என்று, தாயகத்தில் செய்தியாளர்களிடம் தலைவர் வைகோ அறிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.