தமிழக முதல்வரின் டிவிட்டர் பக்கத்தில்… 1 மில்லியனைக் கடந்த ஃபாலோயர்கள்!

Published:

edappadi-tweet

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை (1 மில்லியனை) கடந்துள்ளது.

பொது மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காண முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  தன் ட்விட்டர் கணக்கை பயன்படுத்தி வருகிறார். குறிப்பாக கொரோனா காலத்தில், ட்விட்டரில் பொதுமக்கள் விடுக்கும் கோரிக்கை மீது, அதிகாரிகள் மூலம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண்கிறார். இதனால் பொதுமக்கள் பலரும் தங்களது கோரிக்கைகளை ட்விட்டர் மூலமாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருகின்றனர்.

முதலமைச்சரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவாகி வரும் கோரிக்கையை ஏற்று, ஆபத்தான நிலையில் இருப்பவர்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்டு தமிழகத்திற்கு கொண்டு வருவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைளை முதலமைச்சர் உடனுக்குடன் மேற்கொண்டு வருகிறார்.

அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்களையும், செயல்பாடுகளையும் தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் பதிவிட்டு வருகிறார். இதனால், அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி தற்போது, முதலமைச்சரின் ட்விட்டர் கணக்கில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img