தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு! குணமாகி வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகம்!

அடடே... அப்படியா? சற்றுமுன் சென்னை தமிழகம்
corona-image-1
corona-image-1

தமிழகத்தில் இன்று 3,536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; தமிழகத்தில் ஒரே நாளில் 49 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தமிழக அரசின் சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது 

தமிழகத்தில் இன்று 3,536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதையடுத்து தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 6,90,936 ஆக உயர்ந்துள்ளது 

சென்னையில் இன்று 885 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது இதை அடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,90,949ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 10,691ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 4515 பேர் கரோனா நோய் தொற்றிலிருந்து விடுபட்டு டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர். இதனால், தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,42,152 ஆக அதிகரித்துள்ளது.

தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டியது; இன்று ஒரே நாளில் 83,699 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதுவரை,  தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 49,62,357 ஆக அதிகரித்துள்ளது. 

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்:

districtwise-corona-affected-details-oct-19
districtwise-corona-affected-details-oct-19

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.