vote

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவிருக்கிறது. இதனையடுத்து தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை 7 மணியோடு ஓய்ந்தது.

தமிழகம் மட்டுமல்லாது புதுச்சேரி மற்றும் கேரளாவிலும் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2ம் தேதி எண்ணப்படுகின்றன. அன்றே தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 6-ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடக்கிறது. இந்தத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் தபால் வாக்குப் பதிவு செய்யலாம் என முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

uber - 2026

ஆனால் தபால் வாக்கு அளிக்க இயலாதவர்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற 80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் வீடுகளிலிருந்து வாக்குச்சாவடி மையங்களுக்குச் செல்ல ஊபர் நிறுவனம் இலவச வாகன சேவை வழங்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சென்னை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் மட்டும் இந்த சேவை கிடைக்கும் என்றும் இலவச சவாரியானது, குறைந்தபட்சம் 5 கி.மீ. தூரத்திற்குட்பட்டு இருப்பின் பயண கட்டணம் 100 சதவீதக் கட்டணத் தள்ளுபடியுடன் அளிக்கப்படும் என்றும் ஊபர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ALSO READ:  செல்போனுக்குத் தடை; கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தண்டனையா?

அதன்படி, பயணம் செய்ய விரும்புவோர் கைப்பேசியின் மூலம் “ஊபர்” செயலி (Uber App) வழியாக இலவச பயணத்துக்கு முன்பதிவு செய்ய வேண்டும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending