ரஜினியின் பாராட்டைப் பெற்ற கேரள சிறுவன்!

Published:

athvaith
athvaith

தன் புகைப்படத்தை க்யூப்ஸை கொண்டு வரைந்த சிறுவனுக்கு ரஜினிகாந்த் ஆடியோ வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த சிறுவன் அத்வைத் என்பவர் 300 க்யூப்ஸைப் பயன்படுத்தி நடிகர் ரஜினிகாந்தின் உருவப்படத்தினை வரைந்துள்ளார்.

இதை இணையத்தில் பதிவிட்ட சிறுவன், ரஜினிகாந்த் சார், ரூபிக் க்யூப்ஸ் எனக்கு மிகவும் பிடிக்கும். 300 க்யூப்ஸைகொண்டு உங்கள் உருவப்படத்தை வரைந்துள்ளேன். நீங்கள் இதை விரும்புவீர்கள் என்று நம்புகிறேன்!”என்று கூறியிருந்தார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் தனது முகத்தை 300 க்யூப்ஸைக் கொண்டு வரைந்த கேரளாவை சேர்ந்த சிறுவனுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சூப்பர்ப், க்ரியேட்டிவ் ஒர்க் என்ன ஆடியோ மூலம் சிறுவன் அத்வைத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

முன்னதாக சிறுவன் அத்வைத் , பிரதமர் மோடி, கேரள முதல்வர் பினராயி விஜயன், நடிகர்கள் மம்முட்டி, சுரேஷ்கோபி, சல்மான்கான், பாடகி சித்ரா உள்ளிட்ட பலரின் உருவப்படங்களை க்யூப்ஸைப் பயன்படுத்தி உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி... அழைக்கிறார் மோதிஜி!

Related articles

Recent articles

spot_img