வீடு கட்ட பள்ளம் தோண்டிய இடத்தில் பெருமாள் சிலை!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம்
perumal - 2026

அரியலூர் மாவட்டத்தில் வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் 8 அடி பெருமாள் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருமானூர் பகுதியில் இருக்கும் கரையான்குறிச்சி கிராமத்தில் வாட்டர் சர்வீஸ் கடை வைத்துள்ள சரவணன் அவருக்கு சொந்தமான 3 சென்ட் இடத்தில் வீடு கட்ட முற்பட்டுள்ளார்.

அதன் காரணத்தினால் கடந்த 2 நாட்களாக அஸ்திவாரம் போடுவதற்கு பள்ளம் தோண்டியுள்ளனர். அப்போது அந்த இடத்தில் நேற்று 4 அடி தோண்டிய பொழுது, அங்கு சிலை போன்று ஒன்று இருப்பதை பார்த்துள்ளனர்.

பின்னர் அந்த கற்சிலையை மேலெடுக்க கிராம மக்கள் உதவியோடு முயற்சி செய்துள்ளனர். ஆனால், இரவு நேரம் வந்ததால் இம்முடிவை நிறுத்தி வைத்தனர்.

காலை வருவாய்த்துறை தலைமையில் ஜேசிபி மூலமாக மீண்டும் கற்சிலையை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் 8 அடி உயரமுள்ள சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் இதை சுத்தம் செய்து பார்த்த பிறகு தான் இது பெருமாள் சிலை என்பது தெரியவந்துள்ளது.

பின்னர் அங்கு இந்த சிலைக்கு பூஜை செய்து கிராம மக்கள் வழிபட்டுள்ளனர். இதனை அரியலூர் கோட்டாச்சியர் ஏழுமலை அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

இது திருச்சி அருங்காட்சியகத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், தொல்பொருள் ஆராய்ச்சி மூலமாக இந்த கற்சிலை குறித்த தகவல்கள் சேகரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.