இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் முதல் பிரதமர்! முதல் முறையாக யுஎன்எஸ்சி கூட்டத்திற்கு தலைமை!

pm
pm

ஐக்கிய நாடுகள் (ஐநா) சபையின் சக்திவாய்ந்த அமைப்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் பார்க்கப்படுகிறது.

உலக நாடுகளில் பயங்கரவாத மற்றும் அசாதாரண சூழல்களைத் தடுத்து அமைதியை நிலைநாட்டுவதே இந்த அமைப்பின் தலையாயக் கடமை.

இதில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினராக உள்ளன. இதுதவிர பத்து நாடுகள் தற்காலிகமான உறுப்பினராகவும் உள்ளன.

தற்காலிக உறுப்பினர்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகள். ஒவ்வொரு ஆண்டும் பிராந்தியங்களின் அடிப்படையில் ஐந்து இடங்களுக்கான தேர்தல் நடைபெறும்.

பிராந்தியங்களில் இருக்கும் நாடுகள், தேர்தலில் நிற்கும் நாட்டிற்கு தங்களது வாக்குகளைச் செலுத்தும். அந்த வகையில் இந்தாண்டு ஜூனில் நடைபெற்ற தேர்தலில் ஆசிய-பசிபிக் பிராந்திய உறுப்பினர் இடத்திற்கு இந்தியா போட்டியிட்டது.

பிராந்தியத்திலுள்ள பெரும்பாலான நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவளித்ததால், இந்தியா எட்டாவது முறையாகத் தற்காலிக உறுப்பினராகியது.

2021, 2022 ஆகிய ஆண்டுகளில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக இந்தியா இருக்கும். அதேபோல இந்த கவுன்சிலில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு நாடும் சுழற்சி முறையில் ஒவ்வொரு மாதமும் கவுன்சிலுக்கு தலைமை தாங்கும்.

ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

அந்த வரிசையில் இந்த மாதம் பாதுகாப்பு கவுன்சிலுக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது. 75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் அதே மாதத்தில் பாதுகாப்பு கவுன்சிலுக்கு தலைமை தாங்குவது இந்தியாவுக்கு மரியாதைக்குரிய நிகழ்வு. மிக முக்கியமாக இந்த கவுன்சிலுக்கு பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் (யுஎன்எஸ்சி) கூட்டத்துக்கு தலைமை வகிக்கப் போகும் முதல்இந்திய பிரதமர் என்ற பெருமையைநரேந்திர மோடி பெறவுள்ளார் என்று ஐ.நா. சபைக்கான முன்னாள்இந்திய தூதர் அக்பருதீன் கூறினார்.

இந்தியப் பிரதமர் ஒருவர் தலைமை தாங்குவது இதுவே முதன்முறை. மூன்று உயர்மட்ட ஆலோசனை கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் கடலோர பாதுகாப்பு, அமைதி நடவடிக்கை, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் இந்திய தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச அமைதியை வலுப்படுத்துவதற்கு பங்களிப்பு அளிக்கும் வகையில், தலைமை பதவியில் செயல்படுவோம் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார்.

எப்போதும் மிதவாதிகளின் குரலாகவும் பேச்சுவார்த்தையை ஆதரிக்கும் நாடாகவும் இந்தியா இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories