நோக்கியா டி20 டேப்லெட்: அட்டகாச களமிறக்கம்!

Published:

nokia
nokia

உங்க பட்ஜெட்க்கு ஏத்த விலையில் Nokia T20 Tab கூடிய விரைவில் நோக்கியா அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் என்னென்ன பாக்கலாம்..

நோக்கியா டி 20 டேப்லெட்(Nokia T20 Tablet) விலை மற்றும் விவரக்குறிப்புகள் அதன் அறிமுகத்திற்கு முன்பே தற்பொழுது இணையத்தில் கசிந்துள்ளன.

நோக்கியா நிறுவனம் 2014 முதல் பிராண்டின் முதல் தொகுப்பான டேப்லெட்டாக அறிமுகம் செய்யப்படுவதாகவும், அதன் உரிமம் பெற்ற எச்எம்டி(HMD) குளோபல் முதல் டேப்லெட்டாகவும் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

நோக்கியா மொப்பில் வெளியான அறிக்கையின்படி, நோக்கியா டி20 (Nokia T20) என்று பெயரிடப்படும் என்று எதிர்பார்க்ப்படுகிறது.

tab
tab

அடுத்த நிகழ்வில் நோக்கியா டேப்லெட் உடன் சேர்ந்து, இந்த நிறுவனம் பல வகையான நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களையும் அறிமுகம் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் வெளிப்படையாகப் பெறப்பட்ட ஒரு சாதன சான்றிதழின் வழியாக நோக்கியா டி 20 டேப்லெட் பற்றிய இந்த தகவல் தற்பொழுது இணையத்தில் கசிந்துள்ளது.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

டேப்லெட்டின் வைஃபை மட்டும் மாறுபாடு GBP 185 விலை தோராயமாக ரூ. 19,100 விலைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது, அதே நேரத்தில் வைஃபை + 4 ஜி வேரியன்ட் GBP 202 விலை தோராயமாக ரூ. 20,900 இருக்கும் என்று கூறப்படுகிறது.

நோக்கியா டேப்லெட் 10.36 இன்ச் டிஸ்ப்ளே காட்சிக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் மெமரியுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

nokia tab
nokia tab

டேப்லெட் ப்ளூ கலர் விருப்பத்தில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கிறது. நோக்கியா என் 1 மற்றும் நோக்கியா லூமியா 2520 டேப்லெட்களைத் தொடர்ந்து அதன் வரிசையில் தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டடும் மூன்றாவது டேப்லெட் இதுவாகும்.

Related articles

Recent articles

spot_img