முதியவருக்கு நடந்த 37வது திருமணம்!

அடடே... அப்படியா? உலகம் சற்றுமுன்
marriage
marriage

சமூகவலைதளத்தில் முதியவர் இளம்பெண் ஒருவரை திருமணம் செய்துகொள்ளும் வீடியோ வைரலாகி வரும் நிலையில், அதனுடைய பின்னணி காரணங்கள் வெளியாகி பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

பண்டைய காலங்களில் பல்வேறு பெண்களை மணந்துகொண்டு வாழ்ந்த அரசர்கள் குறித்து கேட்டிருப்போம். ஆனால் இதுபோன்ற நடைமுறை இன்றைய காலத்தில் சாத்தியமற்றதாகவே தோன்றும். அப்படி நீங்கள் நினைத்தால், அது உங்கள் கற்பனையே.

ஆம், தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் இன்றைய காலத்திலும் இதுபோன்ற திருமணங்கள் நடக்கத்தான் செய்கிறது என்பதே உண்மை. அதற்கு சான்றாக இணையதளத்தில் உலாவி வரும் வீடியோ ஒன்று உலாவி வருகிறது.

அதில் முழுவதுமாக முதுமையின் விளம்பில் இருக்கும் பழுத்த கிழவர் ஒருவர், இளம் பெண்ணை திருமணம் செய்துகொள்கிறார்.

அதுவும் 28 மனைவிகள், 135 குழந்தைகள், 126 பேரக்குழந்தைகள் முன்னிலையில் முதியவரின் 37வது திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.

ட்விட்டரில் பகிரப்பட்ட இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் சிலர், உலகிலேயே இவர் தான் துணிச்சல் மிக்கவர் என்று புகழாரம் சூட்டியுள்ளனர்.

இது எப்போது எடுக்கப்பட்ட வீடியோ என்பது தெரியவில்லை. ஆனால் நடந்த இந்த சம்பவம் மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.