விரைவில் அறிமுகமாகும் ரெட்மி 10 ஸ்மார்ட்போன் அம்சங்கள்..!

அடடே... அப்படியா? தொழில்நுட்பம் லைஃப் ஸ்டைல்
redmi
redmi

ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி 10 ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த ரெட்மி 10 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம். வெளிவந்த தகவலின்படி, ரெட்மி 10 ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சிப்செட் வசதியை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ரெட்மி 10 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.5-இன்ச் எஃப்எச்டி பிளஸ் டிஸ்பிளே
இந்த புதிய ரெட்மி 10 ஸ்மார்ட்போனில் 6.5-இன்ச் எஃப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதி உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,450 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ரெட்மி 10 ஸ்மார்ட்போனில் அனைத்து அம்சங்களும் அருமையாக உள்ளது, ஆனால் இது 5ஜி ஸ்மார்ட்போன் கிடையாது. அதாவது 4ஜி வோல்ட்இ ஆதரவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், ஐஆர் பிளாஸ்டர், யூஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய சாதனம்.

ரெட்மி 10 ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவரும். மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி 10 ஸ்மார்ட்போன் மாடல்.

குறிப்பாக இந்த சாதனம் முதல்முறையாக தாய்லாந்தில் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதன்பின்பு தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

புதிய ரெட்மி 10 ஸமார்ட்போன் ஆனது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும். பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாதனம்.

அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும். அதேபோல் இந்த சாதனம் ரூ.13,000 அல்லது ரூ.14000 விலையில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − three =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.