மாநகராட்சி ஆனது தாம்பரம்! மேலும் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப் படுபவை என்ன தெரியுமா?!

tnsecretariat
tnsecretariat

தாம்பரம் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என சட்டசபையில் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சட்டமன்றத்டில் அமைச்சர் கே.என். நேரு வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் நகராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்படும். இந்த பகுதிகளை சுற்றியுள்ள பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளை ஒருங்கிணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்படும்.

காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர் மற்றும் சிவகாசி ஆகிய நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை ஒன்றிணைத்து மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும். திருச்சி, நாகர்கோவில், தஞ்சாவூர், ஓசூர் மாநகராட்சிகள் விரிவு படுத்தப்படும்.

தமிழக தலைநகர் சென்னையின் புறநகரில் அமைந்துள்ள தாம்பரம் நகராட்சி, மாநகராட்சியாக தரம்உயர்த்தப்படுகிறது.

சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக சார்பில் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகள் தரம் உயர்த்தப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் 29 பேரூராட்சிகள், நகராட்சிகளாக தரம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் தாம்பரம் நகராட்சியும் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பு சட்டப்பேரவையில் வெளியாகியுள்ளது.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

நகராட்சிகளாக தரம் உயரும் பேரூராட்சிகளின் பட்டியல்:

காஞ்சிபுரம் மாவட்டம் – மாங்காடு, குன்றத்தூர்;
செங்கல்பட்டு மாவட்டம் – நந்திரவம், கூடுவாஞ்சேரி;
திருவள்ளூர் மாவட்டம் – பொன்னேரி, திருநின்றவூர்;
கரூர் மாவட்டம் – புஞ்சை புகளூர், டின்.பி.எல். புகளூர்;
ராணிப்பேட்டை மாவட்டம் – சோளிங்கர்;
சேலம் மாவட்டம் – இடங்கனசாலை, தாரமங்கலம்;
திருப்பூர் மாவட்டம் – திருமுருகன்பூண்டி;
கோயம்புத்தூர் மாவட்டம் – கூடலூர், காரமடை, கருமத்தம்பட்டி, மதுக்கரை;
விழுப்புரம் மாவட்டம் – கோட்டகுப்பம்;
கள்ளக்குறிச்சி மாவட்டம் – திருக்கோவிலூர்;
தஞ்சாவூர் மாவட்டம் – அதிராம்பட்டினம்; திருநெல்வேலி மாவட்டம் – சுரண்டை, களக்காடு;
சிவகங்கை மாவட்டம் – மானாமதுரை; தூத்துக்குடி மாவட்டம் – திருச்செந்தூர்; கன்னியாகுமரி மாவட்டம் – கொல்லன்கோடு; புதுக்கோட்டை மாவட்டம் – ஆலங்குடி, இலுப்பூர், பென்னமராவதி;
கடலூர் மாவட்டம் – திட்டக்குடி, பெண்ணாடம், வடலூர் ஆகிய பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன.

அதேபோல் தாம்பரம் நகராட்சி அருகில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப் படுகின்றன.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

அதன்படி தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், செம்பாக்கம் ஆகிய நகராட்சிகளையும், திருநீர்மலை, மாடம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, சிட்லபாக்கம் ஆகிய பேரூராட்சிகளையும் இணைத்து தாம்பரம் மாநகராட்சியாக அறிவிப்பு வெளியாகவுள்ளது. இதில் தாம்பரம், பல்லாவரம் அருகே உள்ள 15 கிராம ஊராட்சிகள் இணைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளாட்சி அமைப்பு தரம் உயர்த்தப்படுவதால் சமச்சீரான வளர்ச்சியைப் பெறும் என்பதால் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியாகும் என தகவல் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், அதிமுக, திமுக கட்சியினரிடையே இதற்கு பெரிய வரவேற்பு இல்லை.

காரணம் தலைவர்கள், கவுன்சிலர்கள் எண்ணிக்கை குறைந்துவிடும். இதனால், தங்களுக்கு பதவி கிடைக்காது என்பதால் தரம் உயர்வதை அவர்கள் விரும்பவில்லை என சமூக ஆர்வலர்கள் கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories