இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலும் அமோக வரவேற்பு! கூ சாதனை!

Published:

koo app
koo app

கூ” செயலி கடந்த மார்ச் 2020 ஆம் ஆண்டில் பதிவிறக்கம் செய்யப்பட்டது.
துவங்கிய 15- 16 மாதங்களில் ஒரு கோடி பதிவிறக்கங்களை கடந்துள்ளது.

தொடக்கத்தில் இருந்து பெரிய வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது கூ. பல மொழி மைக்ரோ தளம் என குறிப்பிடக் காரணம் இதில் தமிழ், இந்தி, கன்னடம், மராத்தி, தெலுங்கு, அஸ்ஸாமி,பங்களா மற்றும் ஆங்கிலம் உட்பட எட்டு மொழிகளின் அணுகலை வழங்குகிறது.

தளத்தை உருவாக்குவதற்காக கூ பல தொழில்நுட்ப அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது அதிகமான இந்தியர்களை ஆன்லைனில் உரையாட அனுமதிக்கிறது.

இந்த தளத்தின் மூலமாக தங்களை சுதந்திரமாக வெளிப்படுத்த அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. சமூகவலைதளங்களுக்கு மத்திய அரசு விதித்த கட்டுப்பாட்டை நிறைவேற்றுவதில் டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் முரண்பாடு தெரிவித்து வருகின்றன.

இதற்கிடையில் கூ செயலிக்கு வரவேற்பு அதிகரிக்கத் தொடங்கியது. மார்ச் 2020-ல் தொடங்கப்பட்ட காலம் முதல் தொடர்ந்து மகிழ்ச்சியடைகிறோம் என கூ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!
koo 1
koo 1

டுவிட்டர் போன்று செயல்படும் Koo என்ற செயலி இந்தியாவில் மட்டுமின்றி பலபகுதிகளில் பிரபலமடைந்து வருகிறது. மேட் இன் இந்தியா தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை ஊக்குவிக்கத் தொடங்கியதிலிருந்து, ஏராளமான இந்திய பயன்பாடுகள் வெளவந்துள்ளன.

அதன்படி வெளியான முக்கிய செயலியே கூ ஆகும். Koo செயலி அப்ரமேயா ராதாகிருஷ்ணா மற்றும் மாயங்க் பிடாவட்கா ஆகியோரால் உருவாக்கப்பட்டது.

இந்தியர்களுக்கு இந்தியர்களால் உருவாக்கப்பட்ட ஒரு தளம்
கூ இந்தியர்களுக்கு இந்தியர்களால் உருவாக்கப்பட்ட ஒரு தளமாக இருந்தது. கூ செயலி குறுகிய காலத்தில் சிறந்த வளர்ச்சி அடைந்து வருகிறது.

வெளிநாட்டில் இருந்து கணக்குகள் தொடங்கப்பட்டு வருகிறது. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் நைஜீரியா அரசு நாட்டில் டுவிட்டரை தடை செய்து கூ செயலிக்கு அங்கீகாரம் வழங்கியதுதான்.

நைஜீரியா நாட்டின் அதிபராக இருப்பவர் முகமது புஹாரி. நைஜீரியாவில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்காரணமாக சிவில் போர் ஏற்படும் சூழல் உருவாகி வருகிறது.

ALSO READ:  செங்கோட்டை- நெல்லை பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்!

இந்த நிலையில் 1967-70 வரை நைஜீரியாவில் நடந்த உள்நாட்டு சண்டையை மேற்கோள்காட்டி நைஜீரியா அதிபர் டுவிட் ஒன்று செய்தார். அதிபரின் கருத்து வன்முறையை தூண்டும் வகையில் இருந்ததாக கூறி அந்த பதிவை டுவிட்டர் நிறுவனம் நீக்கியது.

koo
koo

சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்
இதையடுத்து அதிபரின் டுவிட்டர் பதிவு நீக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த நைஜீரிய அரசு டுவிட்டர் பயன்பாட்டுத்து தடை விதித்தது.

அதுமட்டுமின்றி நைஜீரியா நாட்டு பொதுமக்களும் டுவிட்டர் பயன்பாட்டை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. மீறி டுவிட்டர் பயன்படுத்துவோர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்தது.

டுவிட்டருக்கு தடை விதித்த பிறகு நைஜீரிய அரசு இந்தியர்களால் உருவாக்கப்பட்ட கூ செயலிக்கு அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கி, கூ செயலியில் நைஜீரிய அரசு கணக்கையும் தொடங்கியுள்ளது.

அதுமட்டுமின்றி நைஜீரிய அரசின் அனைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இனி கூ செயலி மூலமாகவே வெளியாகும் என அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கூ செயலி இந்தியாவுக்கு வெளியேயும் சிறகுகளை விரிக்கத் தொடங்கியது மகிழ்ச்சி எனவும் கூ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

Related articles

Recent articles

spot_img