தடுப்பூசி போட்டால் செல்போன், டிவி பரிசு! அரசு அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்
vaccine - 2026

கொரோனாவுக்கான தடுப்பூசியை செலுத்தி கொண்டால் செல்போன், டிவி பரிசாக தரப்படும் என்று மணிப்பூர் அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி பணிகள் முன்பை விட வேகம் எடுத்துள்ளன. தடுப்பூசி போட்டுக் கொள்வதின் அவசியம் பற்றி மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.

தங்களின் சவுகரியத்துக்கு ஏற்ப அவ்வப்போது மாநில அரசுகள் கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்கு பரிசுகளை அறிவித்து வருகின்றன. அதன் ஒரு கட்டமாக மணிப்பூர் அரசு ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

வரும் 24ம் தேதி முதல் அடுத்த மாதம் 7ம் தேதி வரை கொரோனா தடுப்பூசி மெகா முகாம்கள் நடக்க உள்ளன. அதில் கலந்து கொண்டு தடுப்பூசி போடுபவர்களுக்கு பரிசுகளை அறிவித்துள்ளது.

அதன்படி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பவர்களுக்கு கவர்ச்சிக்கர பரிசுகள் தரப்படுகின்றன. கலர் டிவி, செல்போன், பெட்ஷீட் உள்ளிட்டவை தரப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளன. இதுதவிர கூடுதல் போனசாக ஆறுதல் பரிசுகளும் தரப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.