அதிக எடையோடு இருந்த காலி சிலிண்டர்! காத்திருந்த அதிர்ச்சி!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்
srilanka cylinders
srilanka cylinders

காலியான எரிவாயு சிலிண்டர் ஒன்று சாதாரணமாக இருக்க வேண்டிய எடையை விட 2.5 கிலோ கிராம் அதிகமாக இருந்துள்ளது. இலங்கை, பண்டாரவளை பிரதேசத்தைச் சேர்ந்த எரிவாயு விற்பனையாளர் அதனை பரிசோதனை செய்துள்ளார். அது அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தெரிவித்த எரிவாயு விற்பனையாளர், “இந்த எரிவாயு சிலிண்டர் 12.5 கிலோ கிராம் எரிவாயுவுடன் வருகிறது. காலி சிலிண்டர், 12.2 கிலோ கிராம் எடை கொண்டது. எரிவாயு நிரப்பப் பட்ட முழுமையான சிலிண்டர் 24.7 கிலோ கிராம் இருக்கும்.

எனினும் தற்போது கையில் உள்ள இந்த சிலிண்டரை அசைத்துப் பார்த்த போது ஏதோ ஒரு பொருள் உள்ளே இருப்பது போன்று சத்தம் கேட்டது. சிலிண்டரின் மேலுள்ள பொத்தானை அழுத்திப் பார்த்த போது அதில் எரிவாயு இல்லை. எனினும் கூடுதலாக அது 2.5 கிலோ கிராம் எடையுடன் காணப்பட்டது. அதன் மறுபக்கம் திருப்பி அழுத்திய போது கறுப்பு நிறத்தில் திரவம் போன்று வெளியேறியது… என்றார்.

அதே நேரம், தனது வீட்டில் எரிவாயு சிலிண்டரில் கசிவு உள்ளது என்று, நிர்மலபுர பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் தெரிவித்துள்ளார். உடனடியாக அவரது வீட்டில் சென்று சிலிண்டரை சோதனையிட்ட போது அதில் இருந்து ஏதா ஒரு பொருள் கசிவதாகத் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் எரிவாயு சிலிண்டர்களை உடனடியாக பரிசோதிக்க வேண்டும் என்று இலங்கை அரசாங்கம் தகவல் வெளியிட்டு, நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.