கஷ்டப்பட்டு வந்த மோடி – இஷ்டப்பட்டு வந்த ராகுல்! ஒப்பிட்ட அனுபம் கெர்!

Published:

Picture : Anupam Kher’s twitter pagerahul gandhi narendra modi - 2026

இந்தி நடிகர் அனுபம் கெர் நியூ யார்க் சென்றிருக்கிறார். தான் பயணம் செய்யும் வரையிலும் பொழுது போக வேண்டுமே என்று டிவிட்டரில் தனது ரசிகர்கள், சமூக ஆர்வலர்களுடன் கேள்வி பதில் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். 

அப்போது பல கேள்விகள் அவரது இணையதள ரசிகர்களால் எழுப்பப் பட்டுள்ளனர். அதற்கு சுவையாகவும் சலிக்காமலும் பதில் கூறியுள்ளார் அனுபம் கெர். அப்போதுதான், பிரதமர் நரேந்திர மோடி தன் முயற்சியால் முன்னேறிய தலைவர் என அவர் பாராட்டியுள்ளார்.

ட்விட்டரில் அவரிடம் அவி டாடியா என்பவர் ஒரு கேள்வி எழுப்பினார். நரேந்திர மோடியையும் ராகுல் காந்தியையும் ஒப்பிட்டு விளக்குங்கள் என்று கேட்க, அதற்கு அனுபம் கெர், “பிரதமர் மோடி தன் முயற்சியால் முன்னேறியவர். இந்தியாவின் வளர்ச்சிக்கு அவரிடம் தெளிவான வரைபடம் இருக்கிறது. ஆனால், ராகுல் காந்திக்கு ஆரம்பத்திலிருந்தே எல்லா சலுகைகளும் கையில் பறிமாறப்பட்டது. தலைவர் பதவியும்கூட. அதனால், அவருக்கு இந்தியாவின் எதிர்காலம் குறித்து எந்த தொலைநோக்குப் பார்வையும் இல்லை” என பதில் அளித்திருக்கிறார்.

anupamkher - 2026

அண்மைக் காலமாக ராகுல் ஜெர்மணி, லண்டன் என வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டுள்ளார். வெளிநாடுகளில் அவர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு குறித்து பேசியவை, வேலை வெட்டி இல்லாதவர்கள்தான் மோடி, டிரம்புக்கு ஆதரவாக களம் இறங்கியிருக்கிறார்கள் என பேசியது, டோக்லாம் உள்ளிட்ட விவகாரங்களில் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டு, அது குறித்து விமர்சிப்பது, உள்நாட்டு விவகாரங்கள் குறித்து புரிதலற்ற பதில்களை அளிப்பது, உள்ளிட்டவை அவர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்க தூண்டியுள்ளன.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img