பிச்சை எடுத்த சுதந்திர போராளி… நீலகண்ட பிரம்மச்சாரி..!

neelakandabrahmachary - 2026

டிசம்பர் 4 இன்று ஒரு மாவீரனை நினைவு கூர்வோம்! நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கு முன்பே சுதந்திர போராட்டத்தில் துப்பாக்கி பயிற்சி கொடுத்து 6000 இளைஞர்களை உருவாக்கிய மாவீரர் ,இவரிடம் பயிற்சி பெற்ற ஒரு இளைஞன் தான் வீர வாஞ்சிநாதன் .திருநெல்வேலி மாவட்டம் மணியாச்சி ரயில் நிலையத்தில் மாவட்ட கலெக்டர் ஆஷ் துரையை சுட்டு கொன்று பின் தன்னையும் சுட்டு உயிர் நீத்த வாஞ்சிநாதன் வீட்டில் இருந்து எடுத்த கடிதத்தில் கிடைத்த தகவலின் அடிப்படையில் நீலகண்ட பிரமச்சாரி ஆஷ் வழக்கில் கைது செய்யப்பட்டு 15 ஆண்டுகள் பர்மா ,மற்றும் ரங்கூன் சிறைகளில் வைக்கப்பட்டு விடுதலை ஆனபின்னும் புத்தகங்கள் ,மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலமாக இந்திய விடுதலைக்கு வறுமையுடன் பணியாற்றியுள்ளார்!

பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து தப்பி பிரெஞ்சு காலனி புதுச்சேரி சென்று கொஞ்சகாலம் இருக்கிறார். பின்னர் மீண்டும் விடுதலைப் போராட்டத்திற்க்காக சென்னை வருகிறார்.தங்க இடம் இல்லை. கையிலும் பணம் இல்லை.வறுமையின் கோர பிடியில் பகல் எல்லாம் மெரினா கடற்கரை,எழும்பூர் ரயிலடி என சுற்றித் திரிகிறார்.

ALSO READ:  சாவர்க்கரும் ஜனநாயகமும்

இரவில் யார் வீட்டு திண்ணையிலாவது உறக்கம்.(அப்போது திருவல்லிக்கேணியில் திண்ணை வைத்த பல வீடுகள் இருந்தது) பசித்தால் மாநகராட்சி அடி பம்ப்ல் தண்ணீர் குடித்து 4 ,5 நாட்களை கடத்துகிறார். பசியின் கொடுமை தாங்காமல் இரவு நேரத்தில் முகத்தில் முக்காடு போட்டுக்கொண்டு ராப்பிச்சை எடுத்தார்.அப்படி ராப்பிச்சை எடுக்கும்போது ஒரு நாள் யார் வீடு என தெரியாமல் ஒரு வீட்டில் கூனிக் குறுகி பிச்சை கேட்டார். வெளியில் வந்து பார்த்தவருக்கு இந்தக்குரலை எங்கோ கேட்டது போல் உள்ளதே என வீட்டுக்காரர் சில விநாடிகள் யோசித்தபோது நீலகண்டனுக்கு அது பாரதி என கண்டுகொண்டு அவ்விடத்தை விட்டு அகல முற்படுகிறார்.

வெளியில் வந்த புரட்சிக்கவி முக்காட்டை நீக்கி நீலகண்டா.. உனக்கா இந்த நிலை என்று கண்ணீர் சிந்தி வீட்டினுள் அழைத்து சென்று பார்த்தால் அவர் வீட்டில் ஒரு பருக்கை சோறு கூட இல்லை.

பிறகு தனது சட்டை பையிலிருந்து காலணாவை எடுத்துக் கொடுத்து சாப்பிடு என்று சொல்லி அனுப்புகிறார்! தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்று நீலகண்ட பிரம்மச்சாரியின் நிலையை பார்த்து தான் பாடுகிறார்

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

அதற்குப் பின்னாளில் கர்நாடக மாநிலம் நந்தி மலையில் ஓம்கார் என்ற இடத்தில த்யானத்தில் மூழ்குகிறார், பின் ஒரு நாள் மோகன்தாஸ் காந்தி கர்நாடகம் வந்து நந்தி மலைக்கு சென்று நீலகண்ட பிரமச்சாரி அவர்களிடத்து ஆசி பெறுகிறார்.

இத்தனைத் தியாகமும் , தவமும் கொண்ட நீலகண்ட பிரமச்சாரி பிறந்த இடம் சீர்காழி அடுத்து உள்ள எருக்கூர் என்ற கிராமம் ஆகும் இன்று அவரின் பிறந்த நாளில் அவரது இல்லத்திற்கே சென்று வணக்கும் வாய்ப்பு கிடைத்தது .சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் நாம் இவர்களின் தியாகத்தை போற்றுவோம்

திருநீலகண்ட பிரம்மச்சாரி போன்ற பல தியாகிகள் காங்கிரஸ் கொள்ளையர்களாலும் திராவிட திருடர்களாலும் இரட்டடிப்பு செய்யப்பட்டு வரலாறுகளில் அவர்களது தியாகங்கள் மறைக்கப்பட்டு அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள் பாரத வரலாற்றின் பக்கங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளனர்.

வாழ்ந்த காலத்திலும், இறந்த பின்னும் தியாகிகளையும் தேச பக்தர்களையும் விடுதலை போராட்ட வீரர்களையும் புறந்தள்ளிய இந்த நாட்டில் திருநீலகண்ட பிரம்மச்சாரி அவர்களின் பிறந்த தின விழா அவருடைய வம்சாவழியினர் மற்றும் நாகை வடக்கு மாவட்ட பாஜக சார்பில் தேசிய செயலாளர்  ஹெச்.ராஜா  தலைமையில் கடந்த ஆண்டு இதே நாளில் திருநீலகண்ட பிரம்மச்சாரி அவர்கள் பிறந்த கிராமமான சீர்காழி தாலுக்கா எருக்கூர் கிராமத்தில் கொண்டாடப்பட்டது…

ALSO READ:  தேர்தலில் வாக்களிக்க... சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

திருநீலகண்ட பிரம்மச்சாரி அவர்களுக்கு அவர் பிறந்த எருக்கூர் மண்ணில் அவர்தம் தியாகத்தை போற்றும் வகையில் நினைவிடம் அமைக்க வேண்டும் அவருடைய வாழ்க்கை வரலாற்றை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பம் மற்றும் கோரிக்கை ஆகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories