கரூர் மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்றுவோம்: எம்.ஆர்.விஜயபாஸ்கர் சூளுரை!

Published:

vijayabhaskar karur - 2026

கரூர் ரயில் நிலைய நுழைவாயில் முன்பு பூங்கா அமைக்க பூமி பூஜை மற்றும் கரூர் ரயில் நிலையம் முதல் மூர்த்தி பாளையம் ரயில் நிலையம் வரை இரும்பு பாதை ஓரத்தில் இருபுறமும் மரக்கன்றுகள் நடும் விழா கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர்தலைமையில் நடைபெற்றது

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கரூர் மாவட்டத்தில் கரூர் ரயில்நிலைய சந்திப்பு பகுதியில் பசுமை அரண் அமைக்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு காகித மற்றும் செய்தித்தாள் நிறுவனம் சார்பில் 50 ஆயிரம் சதுர அடி தூரத்திற்கு மரம் நடும் விழா துவக்கவிழாவும் ரயில் நிலையத்தில் 12 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. கரூர் மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்றுவோம் என்றார்.

அம்மா சாலை ரிங்ரோடு திட்டம் கரூரில் எப்போது துவங்கும் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு வரும் டிசம்பர் 27ம் தேதி வரை ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு விரைவில் பணிகள் துவங்க உள்ளது என தெரிவித்தார்.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

நடைபெறவுள்ள தமிழக சட்டசபை கூட்டத்தில் சென்னை பூண்டி மக்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கிருஷ்ணா நதி நீர் குறித்த கவனத்தில் கொள்ளப்படுமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு தமிழக முதல்வரும் துணை முதல்வரும் இது குறித்து முடிவெடுப்பார்கள் என தெரிவித்தார்.

Related articles

Recent articles

spot_img