ப.சிதம்பரம், நளினி சிதம்பரத்தின் சீனியர் பதவிகளை விலக்க வேண்டும்: உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு கடிதம்!

Published:

P Chidambaram and Nalini Chidambaram - 2026

நிதி முறைகேடுகள், ஊழல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் முன்னாள் மத்திய ‘நிதி’ அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மனைவி நளினி சிதம்பரம் ஆகியோரின் சீனியர் பதவிகளை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு கடிதம் எழுதியிருக்கிறார் தீ பயோனியர் பத்திரிகையின் மூத்த பத்திரிகையாளரான ஜே கோபி கிருஷ்ணன் என்பவர்!

இவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் க்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் ப.சிதம்பரம், நளினி சிதம்பரம் ஆகியோரின் சீனியர் பதவிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்

நளினி சிதம்பரம், ப.சிதம்பரம் இருவருமே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். வருமானவரித்துறை அமலாக்கத்துறை சிபிஐ ஆகியவற்றினால், நிதி முறைகேடுகள் தொடர்பான வழக்குகளில் சிக்கிக் கொண்டு கருப்பு பணம் பண மோசடி ஊழல் ஆகியவற்றின் அவர்களுக்கான தொடர்புகள் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

ஆனால் அவர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் நீதிமன்றத்தின் மூலமே தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ள கோபிகிருஷ்ணன், இரண்டு பக்க கடிதத்தை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதியுள்ளார்

அந்தக் கடிதத்தில் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகிய மூத்த வழக்கறிஞர்கள் சிதம்பரத்துக்கும் நளினிக்காகவும் பல்வேறு வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகி அரசியல் பின்னணியுடன் வாதாடினார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இது சீனியர் அட்வகேட் – மூத்த வழக்கறிஞர் என்ற பதவியை தவறாக பயன்படுத்துவதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்

பண மோசடி தடுப்பு விதியின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் இவ்வாறு மூத்த வழக்கறிஞர் பதவியை வகித்து தப்பித்துக் கொண்டு இருப்பது நாட்டுக்கு கேடு என்று குறிப்பிட்டுள்ள கோபி கிருஷ்ணன் அவர்கள் இருவரையும் மூத்த வழக்கறிஞர் என்ற நிலையில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!
gopikrishnan letter to cji - 2026
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img