அடுத்த மாதமே அமலுக்கு வருகிறது 10 சத இட ஒதுக்கீடு!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்
03 July19 Parliment - 2026

10% இடஒதுக்கீடு பிப்.1 முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.

அரசு வேலைவாய்ப்பு, கல்வி திட்டத்தில் பொதுப் பிரிவினரில் பொருளாதார ரீதியாக பின் தங்கியோருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு சட்டம் இயற்றியிருந்தது. இந்த சட்டம் வரும் பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி முதலே அமலுக்கு வருவதாக அறிவிப்பாணையில் வெளியிடப் பட்டுள்ளது.

இந்த சட்டத்தை ஏற்கெனவே அங்கீகரித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்டு அனுப்பிவிட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

இதனிடையே, இந்த சட்டத்தை எதிர்த்து திமுக., சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.