images 2022 10 17T163817.808 - 2026

தீபாவளி பண்டிகைக்கு சிவகாசியில் ரூ2ஆயிரம் கோடிக்கு பட்டாசு வர்த்தகம்..

அடடே... அப்படியா?
images 2022 10 17T163817.808 - 2026

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு சிவகாசியில் 2ஆயிரம் கோடி ரூபாய்க்கு பட்டாசு வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக பட்டாசு விற்பனையாளர் சங்கம் தகவல் தெரிவித்தனர்.

இந்தியாவின் 90 சதவீத பட்டாசு தேவையை பூர்த்தி செய்யும் சிவகாசியில் 1200 பட்டாசு ஆலைகளில் பட்டாசு உற்பத்தி செய்யப்படுகிறது

3 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும் 2 லட்சம் பேர் மறைமுகமாகவும் பட்டாசு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் சிவகாசியிலிருந்து பட்டாசு விற்பனை செய்யப்படுகிறது

வழக்கமாக சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் வர்த்தகம் நடைபெறும் நிலையில் இந்த ஆண்டு 40சதவீத உற்பத்தி குறைவால் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் மட்டுமே வர்த்தகம் நடைபெற்றுள்ளது

தேக்கம் இல்லாமல் முழுமையாக விற்பனை நடைபெற்றுள்ளதால் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இறுதி நேரத்தில் பட்டாசுக்கான தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் முழுமையடைந்த பட்டாசு விற்பனையானது.

மூலப்பொருள் விலை உயர்வு, உற்பத்தி குறைவு காரணமாக இந்த ஆண்டு பட்டாசு விலை 30 முதல் 40 சதவீதம் வரை உயர்வு ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு 100 சதவீத பட்டாசு உற்பத்தி நடைபெறும் என உற்பத்தியாளர்கள் நம்பிக்கையடைந்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.