இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் ஒரு நாள் போட்டி வரும் 12ம் தேதியும், 2-வது ஒரு நாள் போட்டி வரும் 14ம் தேதியும், 3-வது ஒரு நாள் போட்டி வரும் 17ம் தேதியும் நடக்க உள்ளது.
இந்தியாவுக்கு எதிராக வருகிற 12-ந்தேதி தொடங்கும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. தசைப்பிடிப்பு காயத்தால் ஆஸ்திரேலிய தொடரில் ஆடாத ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அணிக்கு திரும்பியுள்ளார்.



