சிங்கப்பூர் வாழ் இளைஞர்களின் நேசம்! ‘மீண்டும் மோடி’ டீஷர்ட் கோஷம்!

Published:

singapore youths wearing namo again - 2026சிங்கப்பூரில் வேலை செய்யும் பாரதத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியே மீண்டும் 2019இல் வெற்றி பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக சைனீஸ் கார்டனில் #NAMO_AGAIN T Shrit அணிந்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

சிங்கப்பூரில் பணி செய்யும் இவர்களிடம் இது குறித்துக் கேட்டபோது. அவர்கள் கூறியதாவது: அண்மையில் இந்தியா முழுவதும் பாஜக., குடும்பம் என்பதைக் குறிக்கும் விதத்தில் வீடுகள் தோறும் கொடி ஏற்றியும், வீடுகள் தோறும் விளக்கு ஏற்றியும் பெரும்பாலானவர்கள் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

singapore youths wearing namo again1 - 2026

அதேபோல நாங்களும் எங்களது ஆதரவை பிரதமர் நரேந்திர மோடிக்குத் தெரிவிக்கும் விதத்தில் #NAMO_AGAIN T Shrit அணிந்து ஆதரவை தெரிவித்து உள்ளோம்! அவர் பிரதமராக வந்த பின்னர்தான் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கூடியிருக்கிறது. உலகம் நம்மை மதிக்கிறது. அதே மதிப்பும் மரியாதையும் மேலும் நமக்கு வளர வேண்டும் என்றால், நம் பிரதமர் மோடியே மீண்டும் பிரதமராகத் தேர்வு செய்யப் பட்டு உலகுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும் என்றனர்.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

Related articles

Recent articles

spot_img