ரஜினியின் ‘தர்பார்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சொல்லும் செய்தி என்ன!?

Published:

darbar - 2026

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படத்துக்கு ‘தர்பார்’ என பெயர் சூட்டப் பட்டுள்ளது. இப்படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக் இன்று காலை வெளியிடப் பட்டது. இதை அடுத்து, ரஜினி ரசிகர்கள் இந்த அரசியல் சூழல் பரபரப்பிலும் தர்பார் பற்றி பேசி வருகின்றனர்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பார்த்துவிட்டு. அதில் குறிப்பிட்டிருக்கும் ஆங்கில எழுத்துக்களைப் பார்த்துவிட்டு பலரும் இதுதான் பஞ்ச் வசனம் என்று கூறி வருகிறார்கள்.

ரஜினிகாந்த் நடிக்கும் படங்களில் பல பஞ்ச் வசனங்கள் இருக்கும். ஆனால் தர்பார் படத்தின் ஃபார்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே பஞ்ச் வசனத்தோடு வெளியிடப்பட்டுள்ளது என்று கூறுகின்றார்கள் ரசிகர்கள்.

You decide whether you want me to be good, bad or worse என்று எழுதப் பட்டிருக்கும் வசனம் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. அதாவது, நான் எப்படி இருக்கனும்னு நீதான் முடிவு செய்யனும்…நல்லவனா.. கெட்டவனா. இல்ல ரொம்ப மோசமானவானா” என்று பஞ்ச் இடம்பெற்றுள்ளது.

ALSO READ:  செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

துப்பறியும் போலீஸாக இந்த படத்தில் ரஜினி நடித்துள்ளார். அதற்கான அனைத்து அம்சங்களும் இந்த போஸ்டரில் உள்ளன.
தர்பார் போஸ்டரில் போலீஸ் நாய், க்ரைம் ஏரியா, போலீஸ் பெல்ட், குற்றவாளிகளை கைது செய்யும் லாக், தொப்பி, துப்பாக்கி என போலீஸ் மற்றும் க்ரைம் கதையை குறிக்கும் விதமான அனைத்து அம்சங்களையும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கொண்டுள்ளது.

பொங்கல் 2020 என்று திட்டமிடப் பட்டுள்ளது. இதனை போஸ்டரிலும் குறித்துள்ளார்கள். சந்தோஷ் சிவன், அனிருத், ஸ்ரீகர் பிரசாத், டி.சந்தானம், ராம்-லக்‌ஷ்மண், சுந்தர்ராஜ், விவேக், பாபு விஜய், பாலாஜி கணேஷ் என்று ஒரு பட்டாளமே படத்தில் இருக்க, தர்பார் என்ற டைட்டிலின் கீழ் ஏ.ஆர்.முருகதாஸ் ஃபிலிம் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img