விரைவில் பிரசாரம் செய்வேன்: தேமுதிக தலைவர் விஜயகாந்த்

சற்றுமுன் சென்னை

17 July03 vijayakanth - 2026

விரைவில் அதிமுக – தேமுதிக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யப் போவதாகவும் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பல மாதங்களுக்கு பிறகு பேட்டியளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தீவிர அரசியலில் இருந்து விலகி ஓய்வெடுத்து வருகிறார்.

இந்நிலையில் மக்களவை தேர்தல் பிரசாரம் தமிழகத்தில் சூடு பிடித்துள்ள நிலையில், இதுவரை விஜயகாந்த் பிரசார கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் பல மாதங்களுக்கு பின்னர் விஜயகாந்த் பேசிய வீடியோ அவரின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், விரைவில் அதிமுக – தேமுதிக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யப் போவதாகவும் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.