10 சத இட ஒதுக்கீடு… இங்கும் கிரிமி லேயர்!

உரத்த சிந்தனை லைஃப் ஸ்டைல்
modi bjp coucil - 2026

எத்தனை கடுமையான எதிர்ப்புகள் வந்தாலும் சரி, நான் பலமாக ஆதரிக்கிறேன் – 10% இட ஒதுக்கீட்டை!

இந்த,இட ஒதுக்கீடு சமூக சமத்துவத்திற்கான இட ஒதுக்கீடு தத்துவத்திற்கே எதிரானது தான்-சந்தேகமில்லை!

ஓட்டு வங்கி அரசியலுக்கான கீழ்த்தரமான உள்னோக்கம் கொண்டது தான் – ஆம்,சத்தியம்!

என்றாலும் நான் இரு காரணங்களுக்காக உறுதியாக வரவேற்கிறேன்! ஒன்று, ஏற்கனவே போலி சாதி சான்றிதழ் பெறுவதன் மூலமாகவும்,தங்கள் சாதியை தாழ்த்தி இட ஒதுக்கீட்டிற்குள் நுழைந்து அதை அபகரித்து வருவதுமான முன்னேறிய சாதிகளின் சூழ்ச்சிக்கு முற்றுபுள்ளி ஏற்படும்.

மற்றொன்று,விகிதாச்சார அடிப்படையில் பார்த்தால்,ஒதுக்கப்பட்ட இடங்கள் ,குறிப்பிடப்பட்டுள்ள சாதிகளுக்கே போதுமானதல்ல… என்பது மாத்திரமல்ல, இதனால் தற்போதுள்ள இட ஒதுக்கீட்டிற்கு எந்த பாதிப்பும் வந்துவிடாது என்பதுமாகும்!

ஆகவே,இதில் உண்மையிலேயே ஏழைகள் பயன்பெறத்தக்க வகையில் சில திருத்தங்களை வலியுறுத்துவதை விட்டுவிட்டு,இதை வறட்டுத்தனமாக எதிர்பதன் மூலமாக பொதுப்பிரிவினரின் வாக்கு வங்கியை ப ஜ காவிற்கு தூக்கி கொடுக்கும் மூர்க்கத்தனம் தேவையற்றது என்பது தான் சி பி எம் மின் அணுகுமுறையாக இருக்கக் கூடும் என நான் நினைக்கிறேன்.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

ஆனால்,இதை அனுபவிக்கத் தயாராகிக் கொண்டிருக்கும் முன்னேறிய பிரிவினருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டு அவர்களின் மனசாட்சிக்கு ஒரு விண்ணப்பத்தை சமர்பிக்கிறேன்! பா ஜ கவும் இதை கண்டிப்பாக பரிசீலிக்க வேண்டும்.

நீங்கள் ரொம்ப காலமாக சொல்லி வந்தீர்களே..,அந்த கிரிமிலேயரை இந்த 10% இட ஒதுக்கீட்டில் அமல்படுத்தி அனைவருக்கும் முன்மாதிரியாக திகழவேண்டும்-செய்வீர்களா?

ஏற்கனவே பல தலைமுறையாக பலனை அனுபவித்து வரும் பிராமணர்கள் உள்ளிட்ட முன்னேறிய சாதியினர், தங்கள் சமூகத்தில் இன்னும் மிகவும் பின் தங்கியுள்ள – மந்திரம் ஓதி உஞ்சவிருத்தி செய்தும்,சமையல் வேலை செய்தும்,கூலி வேலை செய்தும்.,இது வரை வாய்ப்பே பெற்றிராத – ஒண்டுகுடித்தனத்தில் வாழும் – அந்த ஏழை பிராமணன் உள்ளிட்ட மிகவும் பிந்தங்கிய நிலையில் உள்ள ஏழைகளுக்கு வழிவிட்டு.. மனசாட்சியுடன் ஒதுங்கினால்..,உண்மையிலேயே நீங்கள் மிக உயர்ந்தவர்கள் தான் என்பதை நான் மேடை தோறும் முழங்குவேன்..!

  • சாவித்திரி கண்ணன் (பத்திரிகையாளர்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.