தடுக்கி விழுந்த தமிழிசை! மற்றும்… மீம்ஸ் தமிழன்ஸ்!

உரத்த சிந்தனை புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
thamizisai - 2026

தமிழிசை தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து, திருநெல்வேலி செல்வதற்காக செல்வதற்காக, அவரது காரில் ஏற முயன்றார் அப்போது கால் தவறி கீழே விழுந்தார். உடனடியாக எழுந்த தமிழிசை சிரித்த முகத்துடன் புறப்பட்டு சென்றார். 

கார் ஏறும்போது தடுமாறி விழுந்துட்டாங்க. சட்டென எழுந்து திரும்ப காரில கிளம்பிட்டாங்க… முடிந்தது…

ஆனால் இதை கூட ஒரு செய்தியாக்கி, அதுக்கு மீமீஸ் போட்டு, அதை சமூக வலைதளங்கல்ல போட்டுவிட்டு கேவளமா கமெண்ட பண்ண வைக்கிறது எல்லாம் சரியானதா?

மீமீஸ் போட்ட அந்த பெரும் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய திரு.கேடுகெட்டவர் அவர்களின் வீடுகளில் எல்லாம் பெண்கள் இருக்க மாட்டங்களா? அவங்க எல்லாம் வெளில போகும்போது புடவை தடுக்காதா? தடுமாற மாட்டங்களா?

பொது விஷயத்துக்குனு ஒரு பொம்பள வந்துட்டா…. அந்த பொம்பளை பத்தியேதான் நினைச்சுகிட்டு இருப்பீங்களா?

கட்சி தொடர்பா விமர்சனம் பண்றீங்க…. அதுக்கு ஆண், பெண் பாகுபாடு இல்லை… ஆனால் ஒரு காருல ஏறும்போது புடவை தடுக்குறதை எல்லாம் கொச்சைப்படுத்தி எழுதுவீங்களா?

  • சிகரம் ரேகா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.