அடிபணிந்த லயோலா கல்லூரி நிர்வாகம்: தவறுகளை ஒப்புக் கொண்ட அறிக்கை! விடமாட்டோம் என்கின்றனர் ஹிந்து இயக்கத்தினர்!

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்
loyola college - 2026

எங்களுடைய கல்லூரி வளாகம் தவறான முறையில் சிலரால் பயன்படுத்தப்பட்டது. இதற்கு மன்னிப்பு கோருகிறோம் என்று லயோலா கல்லூரி நிர்வாகம் தனது தவறை ஒப்புக் கொண்டு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

ஆனால் இந்தக் கடிதத்திலேயே எல்லாத் தவறையும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இதை ஆதாரமாக வைத்தே கல்லூரி நிர்வாகத்தின் மீது வழக்கு போடலாம்! அப்போதுதான் இனி இது போல் ஒரு செயலைச் செய்ய அச்சப் படுவார்கள் என்று கொதிக்கிறார்கள் சமூக வலைத்தளங்களில்!

veethi vizha loyola statement - 2026

செய்தியாளர்கள் இந்த நிகழ்ச்சி குறித்து அதன் ஒருங்கிணைப் பாளரிடம் பேசியபோது கேள்வி எழுப்பினர். அதற்கு அதன் ஒருங்கிணைப்பாளர் குறிப்பிடுகையில், இந்த நிகழ்ச்சியில் ஓவியங்கள் வைப்பதற்கு முகிலன் என்பவர் ஸ்டால் கேட்டார். அவருக்கு ஸ்டால் கொடுத்ததை தவிர ஓவியங்களுக்கும் எங்களுக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை என்று கூறி ஒதுங்கிக் கொண்டார்.

இதனிடையே, லயோலா கல்லூரி நிர்வாகம் இப்படி எதிர்ப்பு கிளம்பும் என நினைக்கவில்லை என்றும், செய்வதை எல்லாம் செய்து விட்டு வெறுமே மன்னிப்பு கேட்பது போல் பதுங்குகிறார்கள் என்றும், கிறிஸ்துவத்தில் வேண்டுமானால் பாவ மன்னிப்பு என்ற போர்வையில் பாவங்களைச் செய்துவிட்டு மன்னிப்பு கேட்கலாம்.. ஆனால், ஹிந்துக்கள் பாவம் செய்வதற்கே அஞ்சுவார்கள் என்றும் கூறுகிறார்கள் சமூக வலைத்தளங்களில்! எனவே இந்த நாசகர நக்ஸல் கும்பல் கேட்கும் பாவ மன்னிப்புக்கு ஹிந்து இயக்கங்கள் செவி சாய்க்கக் கூடாது என்று கூறுகின்றனர்.

இது குறித்து இந்து இயக்கங்களின் நிர்வாகிகள் சிலர் குறிப்பிட்ட போது…

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

கல்லூரி நிர்வாகம் இடம் கொடுத்ததுடன் சரி. முகிலன் படம் வைக்க கோரிக்கை வைத்தார்! கொடுத்து விட்டோம் …. படத்தையே நாங்கள் பார்க்க வில்லை… எங்களுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று பட்டும் படாமலும் வருத்தம் தெரிவித்திருக் கிறது லயோலா கல்லூரி நிர்வாகம்.

இதை நடத்திய அமைப்பு ‘வீதி விருது விழா’வை ஆறு வருடமாக நடத்தி வருகின்றனர். இதை நிர்வகிப்பதே லயோலா நிர்வாகம் தான்! இந்த லட்சணத்தில் நைசாக இந்த விவகாரத்தில் இருந்து கழன்று கொடு, முகிலன் என்ற தனிமனிதரை மாட்டிவிடும் வேலையை கிறிஸ்துவ மிஷனரி பாவமன்னிப்பு கத்தோலிக்க
கும்பல் மேற்கொண்டிருக்கிறது என்று கூறுகின்றனர்.

மன்னிப்பு கேட்பதால் மட்டும் இதை இப்படியே விட்டு விடக் கூடாது. வலுவான ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, இவர்களின் கூட்டத்தை தண்டிக்க வேண்டும்.என்று குமுறுகிறார்கள் ஹிந்து இயக்கத்தினர்.

மேலும், பொதுத் தேர்தல் நெருங்க ,நெருங்க புது புது வேலைகளில் ஈடுபடுவார்கள். பிச்சைக்காரன் மாதிரி தாடியோடு ஒருவன் கருத்து கணிப்பு சொல்வான் .. இன்னும் பல வெளிநாட்டு கிறித்துவ சதி வரும் .. கன்னியாகுமரி தொகுதி கூட கிடைக்க விடாமல் இருக்கச் செய்ய கிறித்துவ, நக்சல் கம்யூனிஸ்ட் திராவிட, காங்கிரஸின் தந்திரம் இது. இதை இப்படியே விட்டால்… என்று கேள்வி எழுப்புகின்றனர் பாஜக.,வினர்.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.