மோடிக்கு கருப்புக்கொடி காட்ட வா; மோடியின் காவிப்படை காட்டவா..?! வைகோவை அழைக்கும் பாஜக.,வினர்!

Published:

vaiko varaverpu - 2026

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுதல், பொது நிகழ்ச்சி உள்பட சிலவற்றில் கலந்து கொள்வதற்காக, மதுரைக்கு நாளை வருகிறார் பிரதமர் மோடி!

மோடியின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள் பாஜக.,வினர். மதுரை மாநகரிலேயே வைத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தை அவர் தொடங்குவார் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுரைக்கு வரும் மோடிக்கு கறுப்புக் கொடி காட்டுவோம் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தார் மதிமுக., பொதுச் செயலர் வைகோ!

கடந்த வருடம் சென்னையை அடுத்த திருவிடவெந்தையில் ராணுவ கண்காட்சி ஒன்றுக்காக வந்திருந்தபோது, மதிமுக., ஒருமையில் பேசி அவமதித்தார். கருப்புக் கொடி காட்டி தன் மதிப்பையும் மரியாதையும் தமிழர்கள் மத்தியில் இழந்தார்.

இந்நிலையில், மதுரைக்கு வரும் மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம் என வைகோ சொல்லியிருந்தாலும், அவரை வருக வருக என வரவேற்று பாஜக., இளைஞரணி சார்பில் போஸ்டர் அழைப்பை அழைத்திருக்கிறார்கள்.

உங்களை வரவேற்று வழி அனுப்ப பாரதிய ஜனதா கட்சி இளைஞரணி வழி மீது விழி வைத்து காத்துக் கொண்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள்.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

மதுரை கோட்டப் பொருப்பாளர் சங்கர்பாண்டி என்று பெயரிட்டு இது இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கருப்புக் கொடி காட்டுவது ஜனநாயக உரிமை என்று வைகோ,. தரப்பு குறிப்பிடும் போது, அதைத் தடுப்பது எங்கள் கடமை என்று பாஜக.,வினர் கூறுகின்றனர். மேலும், கருப்புக் கொடி காட்ட இயலாமல் வைகோ திரும்பிப் போனாலும், அவரது தோள் துண்டைக் கழற்றி கருப்புக் கொடியாக அவர் காட்ட வாய்ப்பு இருக்கிறது; எனவே போலீஸார் அதை கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img