ராமலிங்கம் போலவே… பயங்கரவாதிகளின் மதவெறிக்கு பலியானவர்~ நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை!

சின்னஞ்சிறுசுகள் முதல் நடுத்தர மக்கள் வரை அனைவருக்கும் நன்கு பழக்கமான முகம், நடிகர் சிவகார்த்திகேயனின் அந்த சிரித்த முகம்! விஜய் டிவி.,யின் தொகுப்பாளராக அறிமுகமாகி, நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி, தன் கலகல பேச்சால் பலரையும் கவர்ந்தவர் சிவகார்த்திகேயன்.

பின்னாளின் சினிமா அவருக்குக் கை கொடுக்க, இன்று பலருக்கும் பழக்கமானவர் ஆகிவிட்டார். டிவி.,யி இருந்து சினிமாவுக்குச் செல்ல, சினிமா நன்றாகக் கைகொடுத்தது. தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார் சிவகார்த்திகேயன். அவரைப் பற்றி அறிந்தவர்களுக்கு அவரது குடும்பப் பின்னணி குறித்து பெரிதாகத் தெரியாது.

ஒரு முறை விழா ஒன்றில், தனது தந்தை குறித்து கண்கலங்க நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். அதன் பின்னரே, அவரது தந்தை குறித்து வெளியுலகுக்கு பெரிதாகத் தெரிந்தது.

சிவகார்த்திகேயன் தந்தை பெயர் G.தாஸ் அவரது தாயார் ராஜி! சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி! தாஸ், போலீஸ் இன்ஸ்பெக்டர்! திருச்சி மத்திய சிறையில் கைதிகளைக் கண்காணிக்கும் பிரிவில் பணியாற்றியவர். திருச்சி காவலர் குடியிருப்பில்தான் அனைவரும் வசித்து வந்துள்ளனர்.

கோவை குண்டுவெடிப்பில் கைதான பயங்கரவாதிகள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, தங்களுக்கு தேவையான வசதிகளைச் செய்து தரவேண்டும் என்றும் இல்லையெனில் உங்களைக் கொன்றுவிடுவோம் என்றும் பயங்கரவாதிகளிடம் இருந்து மிரட்டல் வந்துள்ளது. ஆனால் அதற்கு ஜி.தாஸ் மறுப்பு தெரிவித்து, தன் போக்கில் நேர்மையாக பணிகளை கவனித்துள்ளார்.

இதனால் 2003ல் அவர் வீடு திரும்பும் போது வழியிலேயே எப்படி ராமலிங்கத்தை கொன்றார்களோ அதே போல் அவரையும் வெட்டிக் கொன்றார்கள் பயங்கரவாதிகள் என்று கூறப்படுகிறது. அந்த நிகழ்வுக்குப் பின்னர் திருச்சியை காலிசெய்துவிட்டு சிவகார்த்திகேயன் குடும்பத்தினர் சென்னைக்கு வந்துவிட்டார்களாம். அப்போது சிவகார்த்திகேயனுக்கு வயது 17 என்று யுடியூப்பில் காணக் கிடைக்கும் ஒரு வீடியோ பதிவில் கூறப்படுகிறது…!

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...