chennai-metro-2

சென்னையில் இன்றும் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப் பட்டிருக்கிறது.

சென்னை மெட்ரோ ரயிலில் இரு தினங்களுக்கு இலவசமாக பயணம் செய்யலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்ததைத் தொடர்ந்து, ஏராளமான பயணிகள் இலவசமாக பயணம் செய்தனர். அண்மைக் காலமாக மெட்ரோ வருமானத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது. வழித்தடங்கள் முழுமை அடையவில்லை என்பதாலும், கட்டணம் அதிகம் என்பதாலும் எதிர்பார்த்த வரவேற்பு இதற்குக் கிடைக்கவில்லை

இந்நிலையில் தொடர்ந்து 3-வது நாளாக இலவசமாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்யலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வண்ணாரப்பேட்டை – விமான நிலையம், சென்ட்ரல் – பரங்கிமலை வரை இரு வழித்தடங்களிலும் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளதால், பயணிகள், குறிப்பாக சிறார்கள் ஆர்வத்துடன் பயணம் செய்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending