காஷ்மீரி மாணவர்கள் மீது தாக்குதலா?! வதந்திகளை பகிராதீர் என சிஆர்பிஎஃப் வேண்டுகோள்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் புகார் பெட்டி பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

crpftweet horz - 2026

இன்று காலை ஒரு செய்தி பரவியது. அதில், காஷ்மீர் மாணவர்கள் நாட்டின் சில பகுதிகளில் தாக்குதலுக்கு உள்ளானதாக டிவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப் மூலம் தகவல் பரவின. அவற்றிலும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்தத் தாக்குதல்களை நடத்தியதாகவும் செய்திகள் பரவின. ஆனால் அவற்றை மறுத்துள்ள சிஆர்பிஎஃப்., அப்படி எந்த சம்பவமும் நாட்டில் நடக்கவில்லை என்று கூறியுள்ளது.

இது குறித்து சிஆர்பிஎஃப் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்….

காஷ்மீர் மாணவர்கள் நாட்டின் பல்வேறு இடங்களில் தாக்குதலுக்கு உள்ளானதாக சமூக வலைத்தளங்களில் போலியான செய்திகளைப் பரப்பி வருகின்றனர். நமக்கும் அத்தகைய செய்திகள் வந்தன. அதை ஒட்டி சிஆர்பிஎஃப் உதவி எண்களை அறிவித்தது. அப்படி ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் தொடர்பு கொள்ள என்று எண்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் பின்னர் குறிப்பிட்ட காவல் நிலையத்தில் தொடர்பு கொண்டு, புகார் குறித்த விவரங்களைக் கொடுத்து தகவல் கேட்ட போது, அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்றும், இவை தவறான தகவல்கள் என்றும் தெரியவந்தது.

இவ்வாறு சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கும் வகையிலும், மக்களுக்கு இடையே வெறுப்பு உணர்வை உருவாக்கும் வகையிலும் சமூக ஊடகங்களில் தகவல்கள் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது.

எனவே தயவு செய்து, இப்படி வெறுப்பு உணர்வைப் பரப்பும் தகவல்களை யாரும் பகிர்ந்து கொள்ளாதீர்கள் என்று சிஆர்பிஎஃப் தனது டிவிட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளது,.

 

முன்னதாக, டேராடூனில் ஒரு கல்லூரியில் காஷ்மீரி மாணவிகள் சிக்கிக் கொண்டதாகவும் அவர்கள் தாக்குதலுக்கு உள்ளானதாகவும் டிவிட்டரில் தகவல்கள் பரவின. இதை அடுத்து சிஆர்பிஎஃப் உதவி எண்களை அறிவித்தது.

ஆனால், அவை போலியானவை என்றும், வதந்திகள் என்றும் தெரியவந்துள்ளன.

இதை அடுத்து, இந்தத் தகவல்களை எவரெல்லாம் பரப்பினார்களோ அவர்கள் சமூகப் பக்கங்கள் குறித்த ஸ்க்ரீன்ஷாட்களை எடுத்து, அதை சிஆர்பிஎஃப் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர் பலர். @Shehla_Rashid என்பவர்தான் இவற்றை முதலில் பதிவு செய்தார் என்று கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிலர் கோரிக்கை வைத்தனர். இவரை தில்லி போலீஸ் கைது செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். உள்துறை அமைச்சகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.