எஸ்றா சற்குணத்துக்கு எதிராக புகார் கூட வாங்க மறுக்கும் காவல் துறை!

Published:

esra sargunam - 2026

மூஞ்சில ரெண்டு குத்து விட்டு ரத்தம் வரவெச்சி… மதம் மாற்றுங்க என்று சொல்லும் கிறிஸ்துவ மத போதகர், கிறிஸ்துவ மதம் சொல்லிக் கொடுத்த படி, வன்முறையை போதித்து, ஹிந்துக்களை மதம் மாற்றச் சொல்லும் விடியோக்கள் இணையதளங்களில் பரவலாக வருகின்றன.

மதம் எனும் போர்வையில் வியாபார சந்தைப் படுத்தலுக்காக, இயேசு கிறிஸ்து என்ற ஒரு கதாபாத்திரத்தையே சிலுவையில் அறைய விட்டு, ரத்தம் வடியவிட்டு, ரத்தவெறியில் பிறந்த கிறிஸ்துவ மதத்தை இந்தியாவில் பரப்ப அதே ரத்த வெறியைத்தான் கையாள்கிறார்கள் கிறிஸ்துவ பாதிரிகள் என்பதற்கு எஸ்ரா சற்குணத்தின் பேச்சு ஓர் உதாரணம் என்கிறார்கள் சமூக வலைத்தளங்களில்!

இந்நிலையில், எஸ்றா சற்குணத்தின் சமூகப் பதற்றத்தை உருவாக்கும் பேச்சு என்று இந்து இயக்கங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் பேச்சுகள் அடங்கிய வீடியோக்களை போலீஸில் கொடுத்து புகார் பதியச் சொல்லியும், போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, குறைந்த பட்சம் புகாரைப் பெற்று பதிவு செய்யக் கூட விரும்பவில்லை என்று உள்ளக் குமுறலை வெளிப்படுத்தியுள்ளார் நமோ பேரவையைச் சேர்ந்த சர்வேஷ் குமார். 

அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இது குறித்து வெளியிட்டுள்ள கருத்தும், கடிதமும்! 

ALSO READ:  தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

சில நாட்களாக சமூக ஊடகங்களில் இந்துக்களை பற்றியும் இந்து மதத்திற்கு எதிராகவும் எஸ்ரா சர்குணம் என்ற கிருத்துவ மத போதகர் பேசிய சர்ச்சைக்குறிய பேச்சுகளை கானமுடிந்தது அவர் பேசிய இரண்டு வீடியோவையும் காண்பித்து மரக்கானம் காவல் ஆய்வாளரிடம் நடவடிக்கைக்காக புகார் மனு கொடுத்தால் அதை அவர் வாங்கவே மறுத்துவிட்டார் CSR கூட கொடுக்க முடியாதாம் இதுகுறிக்து காவல் உயரதிகாரிகளுக்கும் முறையாக தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது இந்துக்கள் பெரும்பாலும் வாழும் நாட்டில் அவர்களே சிறுபான்மை மக்களாக கருதப்படுவது வேதனை..

letter complaint sargunam - 2026

Related articles

Recent articles

spot_img