cctv 1 - 2026இந்தியாவின் திரிபுரா மாநிலம் சாதுடில்லா என்ற கிராமத்தில் குடியிருக்கும் ரத்னா-சந்தன் காந்தி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் கழிந்ததுவிட்டது,

தற்போது ரத்னா, மகளிர் ஆணையத்திடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் தனது கணவர் படுக்கை அறையில் கேமரா வைத்துள்ளார் என்றும் முக்கியமாக தான் படுக்கும் இடத்தைக் குறிவைத்து அதனைப் பொருத்தியுள்ளதாகவும் புகார் அளித்துள்ளார்.

சந்தன் காந்தி குடும்பத்தினர் தன்னை வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாகும் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் ரத்னாவின் கணவரிடம் விசாரணை மேற்கொண்டது மகளிர் ஆணையப் போலீஸ்.

காந்தி விசாரணையில் கூறியதாவது, மனைவியின் நடத்தையில் சந்தேகம் எழுந்தது, இதனால் அவர் படுக்கை அறையில் கேமரா பொருத்தியதாகக் கூறினார். வரதட்சிணைக் கேட்டு துன்புறுத்தியதாக கூறுவது பொய் எனவும் அவர் சாதித்துள்ளார்.

இருவரின் வாதங்களை பதிவு செய்துள்ள மகளிர் ஆணையம், தற்போது 45 நாட்கள் கால அவகாசம் அளித்துள்ளனர். அதற்குள் இருவரும் தங்களின் பிரச்னைகளை பேசித் தீர்க்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending