வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் ! காப்பாற்றிய வீரர் ! வைரலாகும் காணொளி காட்சிகள் !

Published:

perundurai cauvery 4 - 2026ஈரோடு மாவட்டம் பழைய பாளையம் பகுதியை சேர்ந்தவர் திருமூர்த்தி வயது40. இவரது நான்காம் வகுப்பு படிக்கும் மகன் கிருஷ்ணன் வயது 9. இவர்கள் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த பட்லூருக்கு ஆடிப் பெருக்கை கொண்டாட சென்றிருந்தனர்.

அங்கு பாயும் பவானி ஆற்றில் நேற்று பிற்பகல் இருவரும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் இழுத்துச் செல்லப்பட்டனர். இதைக் கண்ட அங்கு பணியில் ஈடுபட்டிருந்த திருச்செங்கோடு தீயணைப்பு நிலைய வீரர் மோகன், உடனே மீட்பு பணியில் இறங்கினார்.perundurai cauvery 3 - 2026தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துவிட்டு, அவர் ஆற்றுக்குள் குதித்து நீந்திச்சென்றார். காவிரி ஆற்றில் குதித்து 200 மீட்டர் தூரத்திற்கு கயிறு கூட இல்லாமல் நீந்திச் சென்றார்.perundurai police - 2026இருவரையும் மீட்க கடுமையாக போராடி, இறுதியில் தந்தை, மகனை மீட்டு கரைக்கு கொண்டு வந்து சேர்த்தார். மயக்க நிலையில் இருந்த இருவருக்கும் முதலுதவி சிகிச்சைகள் அளித்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

Related articles

Recent articles

spot_img