திருச்சி – சேலம் – திருச்சி பயணிகள் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!

அடடே... அப்படியா? கோவை தமிழகம் திருச்சி பொது தகவல்கள்

11 June02 train - 2026

திருச்சி – சேலம் – திருச்சி பயணிகள் ரயில் சேவை மீண்டும் துவக்கம். திருச்சியில் இருந்து நாமக்கல், ராசிபுரம், சேலம் நேரடியாக பயணிக்கலாம்…

திருச்சி – சேலம் – திருச்சி இடையே நாமக்கல் வழியாக செல்லும் சிறப்பு பயணிகள் ரயில் சேவை நீட்டித்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 6ம் தேதி முதல் 2020ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி வரை இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

திருச்சி – கரூர் – நாமக்கல் – சேலம் அட்டவணை

ரயில் எண் – 76833/06833
திருச்சி – 9:40 காலை
குளித்தலை – 10:29/10:30
கரூர் – 11:3511:40 காலை
மோகனுர் – 11:56/11:57 பகல்
நாமக்கல் – 12:18/12:19
ராசிபுரம் – 12:48/12:49
மல்லூர் – 1:04/105
சேலம் – 1:25 மதியம்

சேலம் – நாமக்கல் – கரூர் – திருச்சி அட்டவணை

ரயில் எண் – 06834/76834
சேலம் – 1:30 மதியம்
மல்லூர் – 1:41/1:42
ராசிபுரம் – 1:51/1:52
நாமக்கல் – 2:22/2:23
மோகனுர் – 2:41/2:42
கரூர் – 3:20/3:30
குளித்தலை – 4:16/4:17
திருச்சி – 5:40 மாலை

இந்த ரயில்கள் இருமார்கத்திலும் அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும். முன்னதாக பராமரிப்பு பணி காரணமாக இந்த ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Extension of Train No.06833/06834 Karur – Salem-Karur Passenger specials will continue to run from 06.08.19 to 05.02.20.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.