சபரிமலை தரிசனத்திற்கு 6,000பேருக்கு மட்டுமே அனுமதி கேரள வனத்துறை; பந்தள மன்னா் கடும் எதிர்ப்பு…!

அடடே... அப்படியா? ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் ஆலயங்கள் இந்தியா பொது தகவல்கள் விழாக்கள் விசேஷங்கள்

 

sabarimali iyappan kovil 2 - 2026சபரிமலைக்கு, தினசரி வரும் பக்தர்கள் எண்ணிக்கையை, 6,000 ஆக குறைக்க, வனத்துறை பரிந்துரைத்துள்ளது.

இதற்கு பந்தளம் அரண்மனையும், ஐயப்ப பக்தர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

கேரளாவின், புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. கோவில் அமைந்துள்ள இடம பெரியாறு புலிகள் சரணாலயத்துக்கு உட்பட்ட பகுதியில் அமைந்து உள்ளது.

இங்கு, மண்டல, மகரவிளக்கு காலத்தில், தினந்தோறும், சராசரியாக, ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கமான நிகழ்வு.

இந்நிலையில், கேரள அரசு சார்பில் சபரிமலை குறித்து ஆய்வு செய்ய, உயர்மட்டக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

sabrimali - 2026

வனச்சூழலை பராமரிக்க, ஒரு நாளைக்கு, 6,000 பக்தர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என, அந்தக் குழுவிடம் கேரள வனத்துறை பரிந்துரை செய்துள்ளது.

இதற்கு, பந்தளம் மன்னர் குடும்பம், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து, பந்தளம் அரண்மனை நிர்வாகக் குழு செயலர், நாராயண வர்மா கூறியதாவது:

sabarimali iyappan kovil 1 - 2026

ஐயப்ப பக்தர்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது, தேவையற்ற பின்விளைவுகளை ஏற்படுத்தும்.

ஐயப்ப பக்தர்களுக்கும், வழிபாட்டுக்கும் இடையூறு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை, கேரள வனத்துறை கைவிட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.