“தாத்தா, நீ வெச்சிண்டு இருக்கேயே மாடு அது எனக்கு தறியா” (பையன் வித்யா சங்கர்–பெரியவாளிடம்)

“தாத்தா, நீ வெச்சிண்டு இருக்கேயே மாடு அது எனக்கு தறியா”

(பையன் வித்யா சங்கர்–பெரியவாளிடம்)

“ஐந்தாம் கிளாஸ் படித்து விட்டு வா”-நான் உனக்கு மாடு தருகிறேன்-பெரியவா- (என்றோ நடக்க கூடிய ஒன்றை முன்னறிந்து கூறும் மஹா பெரியவா தீர்க்கதரிசி தானே?)

ஒரு மறுபதிவு.2013 போஸ்ட்.

கே.வி.கே.சாஸ்திரியை வளவனூரில் தெரியாதவரே கிடையாது. ஓய்வு ஊதியம் பெற்று அங்கே சொந்தமான வீடு, நிலம், மாடு, மனை என்று அடுக்கிக்கொண்டே போகலாம். அந்தக் காலத்திலே Rs 136/- பென்ஷன் ரொம்ப பெரிய தொகை. மூன்று கட்டு வீடு, இரு பிள்ளைகள. ஒருவன் வருமான வரி இலாகாவில் பணி. இன்னொருவர் என் அக்காவின் கணவர், அப்பாவின் சொத்தே போதும் என்று அவரும் ஒய்வு பெற்று விட்டார். அவருக்கு ஒரு பிள்ளை, ஒரு பெண். வீட்டிலே வருவோரும், போவோருமாக ஒரு பெரிய ராஜ சமஸ்தனமாகவே இருக்கும். சிவ பூஜா விதிகளில் தேர்ச்சி பெற்றவர்.

ஒரு சமயம் பெரியவா, விழுப்புரத்தருகே உள்ளே எல்லீஸ் சத்திரம் என்ற ஊரில் கேம்ப். அன்று பிரதோஷம். சிறிய கிராமமானதால் கூட்டம் அதிகம் இல்லை. நான், ஏன் அக்கா, கே.வி.கே. சாஸ்திரி, அக்காவின் பையன் வித்யா சங்கர் பிரதோஷ பூஜைக்கு சென்றிருந்தோம். வழக்கம் போல பெரியவா, ருத்ராக்ஷம் முதலியவைகளை அணிந்து நேரே கைலாசத்திலிருந்து இறங்கி வந்த பரமேஸ்வரனைப் போல காட்சி. அனைவருக்கும் தரிசனம் ஆயிற்று.உத்தரவு பெற்று வீடு திரும்பலாம் என்று நாங்கள் பெரியவா உட்கார்ந்திருந்த கீத்து கொட்டகையில் நுழைந்தோம்.

“கிருஷ்ணசுவாமி, எப்படி இருக்கே?” ஏகாதசி புராணம் எல்லாம் நன்னா நடக்கிறதா?” என்றார் பெரியவா.

நாங்கள் அனைவரும் நமஸ்கரித்தோம்.

சிறுவன் போட்டானே ஒரு கேள்வி.

“பெரியவாளைப் பார்த்து “தாத்தா, நீ வெச்சிண்டு இருக்கேயே மாடு அது எனக்கு தறியா” என்றான்.

உடனே ஏன் சகோதரி, “அப்படி பேசப்படாது” என்று பிள்ளையை இழுக்க, பெரியவா கருணையுடன், “உனக்கு அந்த மாடு வேணுமா? தரேன் – ஆனா ஒரு கண்டிஷன்” என்றார்.

“நீ இப்போ என்ன படிக்கற?” என்று வினவினார்.

“மூணாம் கிளாஸ்” என்று உடனே பதில் வந்தது.

பெரியவா உடனே, “நீ ஐந்தாம் கிளாஸ் படித்துவிட்டு வா, நான் உனக்கு மாடு தருகிறேன்” என்றார்.

நாங்கள் ஸ்தம்பித்து நிற்கும் நிலையில் சங்கர் பெரியவாளை பார்த்து “சத்தியமாக?” என்று கேட்டான்.

பெரியவா, “குழந்தாய் நான் சொன்னா வார்த்தையை தவற மாட்டேன். நீ போய்விட்டு வா” என்று சிரித்துக்கொண்டே பிரசாதம் வழங்கினார்.

இரண்டு மூன்று வருடங்கள் ஓடி விட்டது. இப்போது சங்கர் ஆறாம் வகுப்பில் போர்ட் ஹைஸ்கூலில் படிக்கிறான். அப்போது பெரியவா மறுபடியும் வளவனூருக்கே வந்திருந்துந்தார். பெரியவாளை தரிசிக்க சென்றோம். வழக்கம்போல் குசலப்ப்ரச்னம் ஆன பிறகு, பெரியவா புன்முறுவல் பூத்தார். அதன் காரணம் எங்களுக்குப் புரியவில்லை.

திடீரென சங்கர் எல்லீஸ் சத்திர உரையாடலை ஞாபகப்படுத்தி, “இப்போது நான் ஆறாம் கிளாஸ் படிக்கிறேன். எனக்கு மாடு வேணும்” என்று கேட்டான். பெரியவா அதிர்ச்சி அடைந்தா மாதிரி பாவனையுடனே “என்ன படிக்கிற ஆறாம் கிளாஸா?” என்று கேட்டார்.

“ஆமாம்”

“அது சரி, அப்போ நான் என்ன சொன்னேன்?”

“அஞ்சாம் கிளாஸ் படித்துவிட்டு வந்தால் மாடு தரேன் என்று சொன்னேள். இப்போ நான் ஆறாம் கிளாஸ் படிக்கிறேன்” என்று நிறுத்தினான்.

நாங்கள் பயந்து விட்டோம்.

பெரியவா தொடர்ந்தார், “மறுபடியும் நான் என்ன சொன்னேன்?”

“அஞ்சாம் கிளாஸ் படித்து விட்டு வந்தால்…”

“நீ அஞ்சாம் கிளாஸ் படிச்சியா?”, பெரியவா கேட்டார்.

“எங்கம்மா எனக்கு டியூஷன் வெச்சு நாலாம் கிளாஸிலிருந்து ஆறாம் கிளாஸில் சேத்துட்டா, அப்போ நான் அஞ்சாம் கிளாஸ் படிச்சா மாதிரிதானே?”

“நீ அஞ்சாம் கிளாஸ் படிச்சுட்டு வந்தா நான் மாடு தரேன்னு சொன்னேன். நீ படிக்கலே. அதனாலே மாடு உம்மாச்சி கிட்டயே இருக்கும்” என்று கற்கண்டு பிரசாதம் குடுத்தார்.

மறுப்பு ஏதும் சொல்லாமல் “நீங்க சொல்வது சரி” என்று சங்கர் வீடு திரும்பினான்.

என்றோ நடக்க கூடிய ஒன்றை முன்னறிந்து கூறும் மஹா பெரியவா தீர்க்கதரிசி தானே?  

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 13 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories