கண் தெரியாதவருக்கு பார்வை கிடைத்த அற்புதம்

“கண் தெரியாவதருக்கு கண் கிடைத்த அற்புதம்”

(பொறியாளருக்கு கிடைத்த பாக்கியம்)

(பெரியவாளுக்கு தைத்ரீயம் தெரிந்திருக்கும். நியாயம். தேவாரமும் தெரியுமா? சுரேஸ்வராசாரியார் தெரியும்; சுந்தரமூர்த்தியும் தெரியுமா? … பொறிகலங்கிப் போன பொறியாளரே கவலைப்படவில்லை. நமக்கு ஏன் வம்பு?)

தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு பொறியாளர், எல்லாப் புலன்களும் ஒழுங்காக இருந்ததால், படித்துப் பட்டம் பெற்று பதவியும் பெற்றார்.இடையில் இப்படி ஓர் இடி.

பார்வை போய்விட்டது; மருத்துவர்கள் மருந்து போட்டார்கள். ஆனால்,போன பார்வை மருந்துக்குக் கூட வரவில்லை.

மகாஸ்வாமிகள் சென்னையில் முகாம்.

பொறியாளாரால் சுவாமிகளைப் பார்க்க முடியாது தான். ஆனால்,சுவாமிகளின் தெய்வீகக் குரலை கேட்க முடியுமே! செவிப்புலன் பழுதபடவில்லையே? அத்துடன், சுவாமிகளால் இவர் பார்க்கப்பட முடியும்…

நாள் தவறாமல், ஆறுமாத காலம், பெரியவாள் பூஜைக்குச் சென்று கொண்டிருந்தார்.பொறியாளர் வரிசையில் நின்று, தினமும் தீர்த்தப் பிரசாதம் பெற்றுக் கொள்வார்.

உதவிக்காக உடன் வருபவர்கள்,’பெரியவாள் அனுக்ரஹம்ப ண்ணணும்’ என்று மெய்யுருகப் பிரார்த்திப்பார்கள்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 13 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

மற்ற எல்லா அடியார்களுடனும் பேசும் தெய்வம்-இவருக்கு மட்டும் பதில் சொன்னதில்லை; வேதனை,இல்லை,பரிசோதனையா?பத்து நாட்கள் பயங்கரமாகப் போர் செய்யாமலே இராவணனை இராமபிரான் மாய்த்திருக்க முடியாதோ? ஆனால், அவனுக்கு உயிர் போகும் நொடி வரும்வரை, காலத்தை கடத்த வேண்டியிருந்தது.

கட்டுமானப் பொறியாளருக்குக் கண் பார்வை கிடைக்க வேண்டிய புண்ணியதருணம் வந்து விட்டது போலும்.

ஒருநாள், தேவார இசைப்பணிபுரியும் காஞ்சி வரத ஓதுவார் என்ற அடியார், பெரியவாள் தரிசனத்துக்கு வந்திருந்தார்.

பார்வையில்லாத பொறியாளரை அருகில் வைத்துக்கொண்டு, ஓதுவாருடன் ஒரு சம்பாஷணை.

பெரியவாள் கேள்வி: சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்குக் கண்பார்வை ஏன் போனது?

ஓதுவார் விடை: இறைவனுக்குக் கொடுத்திருந்த வாக்கைத் தவறினார்.

“எந்த ஊரில் பார்வை இழந்தார்?”

“திருவொற்றியூர் காலடிப்பேட்டை.”

“பிறகு என்ன செய்தார்?”

“அவ்விடத்திலிருந்து, திருமுல்லைவாயில் சென்று, ‘அமுக்கு மெய்கொடுதிருவடி அடைந்தேன்’ என்ற பதிகம் பாடி விண்ணப்பம் செய்தார்.’

“அடுத்ததாக என்ன செய்தார்?”

“திருவெண்பாக்கம் என்ற தலத்துக்குச் சென்று, பதிகம் பாடினார். இறைவன் சிறிது கருணை காட்டி ஊன்றுகோல் அருளினார்.”

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 12 - ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

“அப்புறம்?”

“காஞ்சிபுரம் சென்று ஏகம்பனை வேண்டினார். ஆலந்தான் உகந்து..என்ற பதிகம் பாடி, இடது கண் பார்வை பெற்றார்.அருகிலேயுள்ள ஓணக்காந்தன் தளி திருக்கோவிலுக்குச் சென்று, பொருள் பெற்றார். பின்னர் காஞ்சிப்பகுதியிலேயே உள்ள திருமேற்றளி அனேகதங்காவதம் சென்று கயிலயங்கிரி நாதனைத் துதித்தார்.

“அடுத்து?”

“திருவாரூர் சென்றார். மீளா அடிமை…என்று தொடங்கும் பதிகம் பாடி, புற்றிடங்கொண்டானை வழிபட்டு,உருகி,உருகி வேண்டினார் .வலதுகண் பார்வையும் பெற்றார்….”

மௌனம்.

“பரமேஸ்வரன் அனுக்ரஹத்தாலே பார்வை கிடைக்கும்.இல்லையா?”

“ஆமாம்”

பொறியாளரைக் கூப்பிட்டு,’சுந்தரமூர்த்தி சுவாமிகள் போன ஸ்தலங்களுக்கெல்லாம், இந்த ஓதுவாரையும் அழைச்சிண்டு போ. அந்தந்த ஸ்தலங்களுக்கான பதிகங்களை இவர் பாடுவார்.

“சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளுக்கு ஊன்றுகோல் கொடுத்த ஈஸ்வரன் புரசவாக்கம் கங்காதரேசுவரர் கோவிலில் இருக்கார். முதல்லே, ஓதுவாருடன் போய், அவரை தரிசனம் பண்ணு;அர்ச்சனை செய்… முக்கண்ணன் அருளினால் பார்வை கிடைக்கும்….”

மகாப்பெரியவாளின் ஆணைப்படி யாத்திரை நடந்தது.

பெரியவாள் வாக்குப்படி பலனும் கிடைத்தது.

பெரியவாளுக்கு தைத்ரீயம் தெரிந்திருக்கும். நியாயம். தேவாரமும் தெரியுமா? சுரேஸ்வராசாரியார் தெரியும்; சுந்தரமூர்த்தியும் தெரியுமா?…

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 11 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

பொறிகலங்கிப் போன பொறியாளரே கவலைப்படவில்லை. நமக்கு ஏன் வம்பு?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories