நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வெற்றிலை மாலை!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் திருச்சி லைஃப் ஸ்டைல் விழாக்கள் விசேஷங்கள்
namakkal anjaneyar 1 - 2026
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வெற்றிலை மாலை அணிவிக்கப்பட்ட காட்சி ……..

உலகப்புகழ் பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயத்தில் உள்ள 18 அடி உயரத்தில் ஒரே கல்லால் ஆன ஆஞ்சநேயருக்கு இன்று, முதல் முறையாக 1 லட்சத்து 8 வெற்றிலை மாலை சாற்றி வழிபாடு செய்தனர்.

இந்தக் கோவிலில் நரசிம்மர்-அரங்கநாதர் சுவாமிகளை கை கூப்பி நின்று வணங்கிய படி உள்ள ஆஞ்சநேயருக்கு இன்று ஆவணி மாதம் கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு பல்வேறு சிறப்பு திருமஞ்சனமும் நடைபெற்றது.

அதன் பின், ஒரு லட்சத்தி எட்டு வெற்றிலை அலங்காரம் (1,00,008) செய்யப் பட்டு சிறப்பு அர்ச்சனையும் மஹா தீபமும் ஏற்றப்பட்டது.

namakkal anjaneyar - 2026

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு முதன் முறையாக இந்த 100008 வெற்றிலை அலங்காரம் சாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றிலை அலங்காரத்தில் 25 கிலோ ரோஜா, சம்மங்கி பூ பயன்படுத்தப்பட்டு ஆஞ்சநேயப் பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.