“சலீமுக்கு ருத்ராட்ச மாலை” (ஒரு முஸ்லிம் பக்தனுக்கு அருள்)

“சலீமுக்கு ருத்ராட்ச மாலை”

(ஒரு முஸ்லிம் பக்தனுக்கு அருள்)

(யாரறியக்கூடும்,ஸ்ரீ பெரியவாளின் தெய்வீக சக்தியை? )

சொன்னவர்;பொள்ளாச்சி ஜெயம்மாள்
தொகுப்பாசிரியர்;கோதண்டராம சர்மா.
தட்டச்சு;வரகூரான் நாராயணன்

ஸ்ரீ பெரியவாள் மௌனியாக நாற்காலியில் தூக்கிவரப்பட்டு தரிசனம் கொடுத்த சமயம். நானும் நாகலட்சுமியும் எல்லோருடனும் க்யூவில் சென்று கொண்டிருந்தோம்.அப்பொழுது எங்களுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த ஒருவன்

“சாமி சொன்னபடி நான் வந்துட்டேன்” என்று பெரியவாளைப் பார்த்துக் கும்பிடு போட்டான்.

ஸ்ரீ பெரியவாளும் மற்றவர்களைப் பார்க்காமல் அவனையே பார்த்து,கை தூக்கி ஆசீர்வாதம் செய்தார்கள்.நான் அவனை விசாரித்தேன்,அவன் தன் பெயர் சலீம் என்றும், கும்பகோணத்திலிருந்து வந்திருப்பதாகவும்சொன்னான்.

“நேற்று சொப்பனத்தில் வந்து நாளை நான் க்ஷவரம் செய்து கொள்ளும் தினம்,என்னை வந்து பார்த்துவிட்டுப் போ – என்று சாமி சொன்னார்கள். அதனால்தான் வந்தேன்” என்றான்.

அன்று வபன தினம்.ஸன்யாஸிகள் இரண்டு மாதத்திற்கு ஒரு தடவை பௌர்ணமி திதியில் தான் முண்டனம் செய்து கொள்ள வேண்டும். அது வபனம் என்ற வடமொழிச் சொல்லில் ஸ்ரீமடத்தில் குறிப்பிடுவது வழக்கம். அதெற்கென்றே நாங்கள் வருவது வழக்கம்.

ஆனால்,அந்த முஸ்லிம் பக்தனை எதற்காக வரச் சொன்னார்கள் என்று புரியவில்லை.நான் நாகலட்சுமியிடம் அவனைப் பற்றிக் கூறியபோது, ‘அவனுடைய பெயர் செல்லப்பன் என்று இருக்கக்கூடும்; தவறாக சலீம் என்று உன் காதில் விழுந்திருக்கும்’ என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே அந்த முஸ்லிம் பக்தன் மறுபடியும் எதிர்ப்பட்டான்.

அவன் ருத்ராட்ச மாலையும் அணிந்து கொண்டிருந்தான். அவனை மறுபடியும், “நீ ருத்ராட்சம் அணிந்து கொண்டிருக்கிறாய், உன்னை மசூதியில் விடமாட்டார்களே? என்று விசாரித்தோம்.

“நான் முஸ்லிம்தான்; பெயர் சலீம். சாமியை முன்பே மூன்று நான்கு தடவை பார்த்திருக்கிறேன். ஒரு தடவை இந்த ருத்ராட்ச பிரசாதத்தைக் கொடுத்தபோது, இதை என்ன செய்ய வேண்டும்? -என்று கேட்டேன்.

சாமி, இதைக் கழுத்தில் அணிய வேண்டும். ஆனால், உன்னைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடும்,ஆகையால்,பெட்டியில் வைத்துக்கொள்” என்றார்கள்.

“நான் சாமி கொடுத்ததை கழுத்தில்தான் போட்டுக் கொள்ள வேண்டும் என்று தீர்மானம் செய்து அப்படியே போட்டுக் கொண்டேன். நான் தொழுகைக்குப் போகும் போது கூட என்னை யாரும் குறைகூறியதில்லை; மாலையைக் கழற்றச் சொன்னதுமில்லை.”

யாரறியக்கூடும்,ஸ்ரீ பெரியவாளின் தெய்வீக சக்தியை?

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூன் 13 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories