ஏன் கொலு வைக்கவில்லை?-3 வயதுக் குழந்தை!

“ஏன் கொலு வைக்கவில்லை?”-மூன்று வயதுக் குழந்தை

(“கொலு வைக்கணும்னு நாம சங்கல்பம் பண்ணிக்கல்லே. அம்பாள் சித்தம்….”பெரியவா)

(பெரியாவாளுடைய மனம் நளினீதளகதஜலம். தாமரை இலைத் தண்ணீர். முத்துக்களாகப் பளீரிடும்; ஆனால், ஒட்டிக்கொள்ளாது)

(நவராத்திரி ஸ்பெஷல் போஸ்ட்-29-09-2019ஆரம்பம்)

சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

சிவாஸ்தானத்தில் தங்கியிருந்தபோது நவராத்திரி வந்தது.

பக்தர் குழுவில் மூன்று வயதுக் குழந்தை ஒன்று எல்லோரையும் போல் நமஸ்காரம் செய்து விட்டு , பெரியவாளை நோக்கிப் போயிற்று.

பெரியவாள் எதிரில் தட்டுத் தட்டாகப் பழங்கள், கற்கண்டு,திராட்சை.

பெரியவாள்,அருகிலிருந்த தொண்டர் பிரும்மசாரி ராமகிருஷ்ணனைப் பார்த்து, ஒரு ஆப்பிள் எடுத்து,குழந்தையிடம் கொடுக்கச் சொன்னார்கள்-குழந்தை பழத்துக்காக வந்திருக்கிறதோ என்று.குழந்தை ஆப்பிளை லட்சியம் செய்யவில்லை.

பெரியவாளைப் பார்த்து,
“ஏன் கொலு வைக்கவில்லை?” என்று கேட்டது.
குழந்தை சொன்னது, தெய்வம் சொன்ன மாதிரி.

கூடியிருந்த பக்தர்களை, ஆளுக்கு ஒரு பொம்மை வாங்கி வரும்படி கூறினார்கள் பெரியவா.

ஒரு மணி நேரத்தில் ஏராளமான பொம்மைகள் சேர்ந்து விட்டன, அதற்குள் படிக்கட்டு தயார்.தினந்தோறும் இரவில் சுண்டல் நைவேத்யம்; விநியோகம்.சுமங்கலிகளுக்கு தாம்பூலம்-குங்குமம்.நவராத்திரி முடிந்ததும், பொம்மைகளைக் காகிதத்தில் சுற்றி,அட்டைப்பெட்டியில் வைத்து, பாதுகாப்பாக வைப்பதற்கு பிரும்மசாரி ராமகிருஷ்ணன் ஏற்பாடு செய்துகொண்டிருந்தார்
.
“கொலு வைக்கணும்னு நாம சங்கல்பம் பண்ணிக்கல்லே.அம்பாள் கிருபை. நவராத்திரி முடிஞ்சு போச்சு. வருகிற பக்தர்களிடம் ஒவ்வொரு பொம்மையா கொடுத்துடு. அடுத்த வருஷத்துக்காக ப்ரிஸர்வ் பண்ணாதே. அடுத்த வருஷ நவராத்திரி….. அம்பாள் சித்தம்….”

பெரியாவாளுடைய மனம் நளினீதளகதஜலம். தாமரை இலைத் தண்ணீர். முத்துக்களாகப் பளீரிடும்; ஆனால், ஒட்டிக்கொள்ளாது

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 12 - ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories