மகனின் ஆன்மா சாந்தி அடைய-பெரியவர் சொன்ன பரிகாரம்!

”நீ வசிக்கிற கிராமத்துல ஓயாம உழைக்கிற குடியானவ ஜனங்கள் இருப்பா இல்லையா? நீ அவாளுக்கெல்லாம் மதிய வேளைல நீர்மோர் குடுக்கறதுக்கு ஏற்பாடு பண்ணு.
தவிச்சுண்டிருக்கறதா நீ சொல்றியே ஒன் பிள்ளையோட ஆன்மா, அது தவிக்கறதை விட்டு கட்டாயம் சாந்தி அடைஞ்சுடும்.”

(பெரியவர் சொன்ன பரிகாரம்!)

கட்டுரையாளர்-திருப்பூர் கிருஷ்ணன்.நன்றி-தினமலர்.

காஞ்சி பெரியவரை தரிசிக்க வந்திருந்தார் ஒரு பெண். முகத்தில் சோகமோ சோகம். அவரது பிள்ளை கல்லுாரி மாணவர். ரயிலில் அடிபட்டு காலமாகி விட்டார். தாய் வேதனையில் துடித்தார்.
அவர் சுவாமிகளைத் தேடி வந்தது தன் சோகத்திற்கு மாற்றுத் தேடி மட்டுமல்ல. விபத்தில் இறந்த உயிர்கள் ஆவியாய் அலையும் என்கிறார்களே, மகனின் ஆன்மா சாந்தி அடைய என்ன செய்வது என்பதை தெரிந்து கொள்ளவும் தான்.

ஆளாளுக்கு ஒன்று சொல்கிறார்களே? எது சரியான பரிகாரம் என்பதை எப்படி அறிவது? அதோடு அந்த ஆன்மா உண்மையிலேயே சாந்தி அடைந்ததா என்பதை எப்படி உணர்ந்து கொள்வது?
தாய் மனம் தவித்தது. சுவாமியே சரணம் என வந்து விட்டாள். மகாபெரியவர் சொன்னால் கட்டாயம் சரியாக தான் இருக்கும் என்ற நம்பிக்கை அவருக்கு.

‘சுவாமி! என் புத்திர சோகத்தை மெல்ல மெல்ல ஆற்றி கொள்வேன். ஆனால் என் புத்திரனின் ஆவி அலைந்து கொண்டிருக்கும் என்ற எண்ணத்தால் ஏற்படும் சோகத்தை தாங்க முடியவில்லை! அவன் ஆவி நற்கதி அடைய ஒரு பரிகாரம் சொல்லுங்கள். அது நற்கதி அடைந்ததை நான் எப்படி அறிவது என்பதற்கும் ஒரு வழி சொல்லுங்கள்!’

சுவாமிகள் மனத்தில் கருணை பெருகியது. அவரும் சாந்தி, ஹோமம் போன்ற பரிகாரங்களின் சக்தியை எடுத்து சொல்வதுண்டு தான். ஆனால் தன் மகனின் ஆவி நற்கதி அடைந்ததைத் தான் அறிய வேண்டும் என்கிறாளே? அருள் பொங்க பார்த்த அவர் பேசலானார்:

”நீ வசிக்கிற கிராமத்துல ஓயாம உழைக்கிற குடியானவ ஜனங்கள் இருப்பா இல்லையா? நீ அவாளுக்கெல்லாம் மதிய வேளைல நீர்மோர் குடுக்கறதுக்கு ஏற்பாடு பண்ணு.
தவிச்சுண்டிருக்கறதா நீ சொல்றியே ஒன் பிள்ளையோட ஆன்மா, அது தவிக்கறதை விட்டு கட்டாயம் சாந்தி அடைஞ்சுடும். நீர்மோர் குடிச்ச குடியானவ ஜனங்களோட முகத்தை பார். அந்த முகங்கள்ல தென்படற மலர்ச்சி தான் உன் மகன் ஆன்மா சாந்தி அடைஞ்சதோட அடையாளம். வேற பரிகாரம் ஒண்ணும் பண்ண வேண்டாம்”.

தாயின் முகத்தில் ஒரு தெளிவு ஏற்பட்டது. அப்படியே செய்கிறேன் என நமஸ்கரித்து விடைபெற்றார்

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 12 - ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories